மட்டக்களப்பில் வரட்சியினால் 14,342 குடும்பங்கள்

0
227

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியினால் 14342 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை, ஓட்டமாவடி, கிரான், செங்கலடி, வெல்லாவெளி, பட்டிப்பளை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் 14342குடும்பங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடுமையான வரட்சியினாலும், அதிக வெப்பத்தினாலும் கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தும் நீர்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை பெறுவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீரை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களுக்கும், பிரதேசத்துக்குரித்தான உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கும், செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

வரட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 62 கிராமசேவையாளர் பிரிவுகளிலும் உள்ள 14,342 குடும்பங்களுக்கு குடிநீர் பவுசரில் குடிநீர் ஏற்றப்பட்டு வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here