யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றியோரை தேடும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு!

0
186

10815771_719072364829029_1419872836_nயாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று  விளக்கேற்றியவர்களினை கண்டறிவதற்கான முயற்சிகளினை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு (ரி.ஐ.டி.) மேற் கொண்டுவருவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முதற்கட்டமாக நேற்றும், நேற்று முன்தினமும் கொக்குவில் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்று படையினர் விசாரணைகளினை மேற்கொண்டுள்ளனர்.

நவம்பர் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இவ் மாவீரர் தினம் தமிழர்களினால் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலை யில் இந்நிகழ்வுகளினை நடத்துவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் திகதி மாவீரர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் உணர்வுபூர்வமாக மட்டும் அனுஷ்டிக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வுகள் அனைத்தும் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு தெரியாமல் மறைவான இடங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளிற்கு மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அனுஷ்டிக்கப்பட்ட இடங்களினை இராணுவத்தரப்பு முற்றுகையிட்டி ருந்ததோடு மாவீரர் நாள் தொடர்பிலான துண்டுப்பிரசுங்களினை வைத்திருந்த நபர்களும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மாவீரர் நாள் முடிவுற்று ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் அது தொடர்பிலான விசார ணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மாவீரர் தின சுடர் ஏற்றிய, ஏற்ற முயன்றவர்களினை சரணடையுமாறும் எச்சரிக் கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here