பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த கூடைப்பந்தாட்டப் போட்டி!

0
445

பிரான்சில் நடைபெற்று முடிந்த மாவீரர் நினைவு சுமந்த கூடைப்பந்தாட்டமும், தமிழீழ தமிழ்மகன் மதிப்பளிப்பும்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய 2019 ம் ஆண்டுக்கான மாவீரர் நினைவு சுமந்த கூடைப்பந்தாட்டப் போட்டி செவரோன் Gymnase André Lemarchand மைதானத்தில் 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை 1987ல் இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கப்டன் ரூபனின் சகோதரி ஏற்றிவைத்திருந்தார். தொடர்ந்து அகவணக்கத்துடன் போட்டியில் பங்கு பற்றும் கழகங்களையும், வீரர்களையும் தமிழர் விளையாட்டுத்துறையினர் வரவேற்றுக்கொண்டனர்.

இன்றைய போட்டியில் 15 வயது ஆண் பெண், 19 வயது கீழ் ஆண் பெண், 19 வயதின் மேல் ஆண் பெண்களுக்கான போட்டிகள் இடம் பெற்றன. 

93 தமிழர் விளையாட்டுக்கழகம்     94 தமிழர் விளையாட்டுக்கழகம்

நல்லூர் ஸ்தான் வி. கழகம்       யாழ்டன் வி. கழகம்.

ஈழவர் வி. கழகம்              N S பாரிஸ் வி.கழகம்

அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் மொத்தமாக 32 அணிகள் இன்றைய போட்டியில் பங்கு கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் இடையில் காலத்தின் தேவையான மதிப்பளிப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. 

பிரான்சு நாட்டின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட நடுவர்களில் ஒருவராக இருந்து வருபவரும், சிறிய வயதில் பிரான்சு நாட்டிற்கு வந்து விளையாட்டிலும், தமிழ்க்கல்வியிலும் தன்னை இணைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது,  பிரான்சு தேசத்தின் சிறந்த இடத்தில் தொழிலாற்றிக் கொண்டும் கூடைப்பந்தாட்ட நடுவர் பணியையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருபவரும், தனது சின்ன வயதில் 93 தமிழர் விளையாட்டுக் கழகத்தின் வீரராகவும், பின்னர் எமது பல போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றி வந்தவருமாகிய திரு. யோகச்சந்திரன் கிரிதரன். இப்படிப்பட்ட ஒரு உன்னத விளையாட்டுத் தலைமகனை தமிழர் விளையாட்டுத்துறை மதிப்பளித்து மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இன்றைய தினம் அவரை அவரின் குடும்பத்தினர் சகிதம் அழைத்திருந்தனர். அனைத்து வீரர்களும் தமது கழகக்கொடியுடன் அணிவகுத்து நிற்க பிரெஞ்சு தேசியக்கொடியும், தமிழீழ தேசியக்கொடியும் பக்க பலமாக்க இவர்பற்றிய விளக்கத்தையும் மதிப்பளிப்பின் தேவையையும், சிறப்பையும் தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டியின் முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்கள் எடுத்துரைக்க மக்களின் வீரர்களின் பெரும் கரகோசத்திற்கு மத்தியில் துணைவியார், பிள்ளை பெற்றோர் முன்னிலையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.மகேசு அவர்களால் ஒரு நினைவுக் கேடையம் வழங்கி மதிப்பளிப்பு செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்பிரிவுகளுக்கான போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்றன.

நடைபெற்று முடிந்த போட்டிகளின் பெறுபேறுகள் பின்வருமாறு :-

15 பெண்கள் 

1ம் இடத்தை யாழ்டன் வி. கழகம்

2ம் இடத்தை தமிழர் வி. கழகம் 94

3ம் இடத்தை நல்லூர் ஸ்தான் வி. கழகம்

4ம் இடத்தை தமிழர் வி. கழகம் 93. பெற்றுக் கொண்டன.

19 வயதின் கீழ் பெண்கள்

1ம் . யாழ்டன் வி; கழகம்

2ம் . நல்லூர் ஸ்தான் விகழகம்

19 வயதின் மேல் பெண்கள்

1ம். நல்லூர் ஸ்தான் A அணியினர்

2ம். ஈழவர் விளையாட்டுக்கழகம்

3ம். த.வி. கழகம் 93

4ம். நல்லூர் ஸ்தான் B அணியினர்.

15 ஆண்கள்

1ம் இடம் யாழ்டன் வி.கழகம்

2ம் இடம் த.வி. கழகம் 94

3ம் இடம் நல்லூர் ஸ்தான் வி.கழகம்

4ம். இடம் யாழ்டன் விளையாட்டுக்கழகம்

19 வயதின் கீழ் ஆண்கள்

1ம் இடம் யாழ்டன் வி. கழகம் A

2ம் இடம் நல்லூர் ஸ்தான் வி. கழகம் B

3ம் இடம் யாழ்டன் B

4ம் இடம் த. வி. கழகம் 93 B

19 வயதின் மேல் ஆண்கள்

1ம் இடம் த.வி கழகம் 93

2ம் இடம் N S பாரிசு வி. கழகம்

3ம் இடம் நல்லூர்ஸ்தான் வி. கழகம்

4ம் இடம் த.வி கழகம் 94 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here