பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்!

0
512

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதியும்,
தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்தவருமான பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் இன்று இயற்கை எய்தினார்.

விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய
இந்த உன்னத அன்னைக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம். இவரது ஆண்மா நித்திய சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

தாய்நாட்டின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அவர்களின் உறவுகள் அனைவரும் மரியாதைக்குரியவர்கள்.;.

தங்கள் பிள்ளைகளை மட்டுமல்லாமல் அனைத்து போராளிகளையும் தங்கள் அன்பினால் அரவணைத்து காத்த மாவீரர் பெற்றோர், மணவாழ்வில் இணைந்து எவ்வளவோ நெருக்கடிகளுக்குள்ளும் தங்கள் துணைகளுக்கு பக்கபலமாக வாழ்ந்த மாவீரர்களின் வாழ்க்கைத்துணைகள், மாவீரர்களின் உயிரின் உருவமான அவர்களின் பிள்ளைச்செல்வங்கள் மாவீரர்களின் உடன்பிறந்தோர், உறவுகள் அனைவருமே மதிக்கப்படவேண்டியவர்கள்

எந்த இலக்கை அடைவதற்காக மாவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்களோ அந்த இலக்கை அடைவதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். அவர்கள் நடந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுக்கவேண்டும்

வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டவர்.

அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்.
“ராஜ் ஈழம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here