
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, இன்று(19) வெகு விமரிசையாக நடைபெற்றது.
பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
காலையில் இடம்பெற்ற அபிஷேகத்தினைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.அதன் பின்னர் அம்பிகை பரிவார மூர்த்திகளுடன் உள்வீதி வலம்வந்தார்.
பஞ்சரதங்களிலே விநாயகரின் தேர் முன்நோக்கி நகர மாத்தளை முத்துமாரியம்மன் அலங்கார தேவியாக தேரில் வெளிவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

அம்பிகையின் அருட்காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.




மங்கள வாத்தியங்கள் முழங்க உள்வீதியில் இருந்து அம்பிகை வலம்வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோஹணித்தார்.