ஐக்­கிய நாடுகள் விசேட பிர­தி­நி­தி­யுடன் அர­சியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பு முக்­கிய பேச்சு!

0
106

TNA-press-600x400இலங்­கையில் நீண்­ட­கா­ல­மாக காணப்­படும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­த­ர­மா­னதும் நீதி­யு­மான அர­சியல் தீர்­வொன்றைப் பெறு­வது குறித்து இலங்­கைக்கு உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட பிர­தி­நிதி பப்லோ டி கிரிக் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருடன் தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பு முக்­கிய பேச்­சு­வார்த்­தை­யொன்றை நடத்­தி­யுள்­ளது.

அத்­துடன் எதிர்­வரும் செப்டம்பர் மாதம் ஐக்­கிய நாடுகள் சபையால் வௌியி­டப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்­கையில் குறித்த விசேட பிர­தி­நி­தியின் இலங்கை விஜயம் அதி­கூ­டிய தாக்கம் செலுத்தும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நம்­பிக்கை வௌியிட்­டுள்­ளது.

இலங்கை ஆறு நாட்கள் உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட பிர­தி­நிதி பப்லோ டி கிரிக் நேற்­றைய தினம் இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தர்­களை கொழும்பு தாஜ்­ச­முத்­திரா ஹோட்­டலில் காலை 7.30க்குச் சந்­தித்தார்.

சுமார் ஒரு மணி 15நிமிடம் வரை நீடித்த இச்­சந்­திப்பில் ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­கா­ரிகள் கலந்து கொண்­ட­துடன் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் சார்­பாக சுரேஷ் பிரே­ம­சந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன், எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன். இச்­சந்­திப்பு குறித்து கருத்து வௌியி­டு­கையில்,

ஐ.நா விசேட பிர­தி­நி­தி­யு­ட­னான சந்­திப்பு மிகவும் ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­தி­ருந்­தது. விசே­ட­மாக நாம் நீண்­ட­கா­ல­மாக இங்கு காணப்­படும் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மா­னதும் நீதி­யா­து­மான தீர்­வொன்று எட்­டப்­ப­ட­வேண்டும் என்­பது குறித்து ஆராய்ந்­தி­ருந்தோம்.

இப்­பி­ர­தி­நிதி விசே­ட­மாக பொறுப்புக் கூறல், நல்­லி­ணக்கம் ஐ.நாவின் உண்­மையை ஊக்­கு­வித்தல், நீதி, இழப்­பீ­டுகள் மற்றும் மீள் உரு­வா­காமல் உத்­த­ர­வா­தப்­ப­டுத்தல் ஆகிய விட­யங்­களை நேரில் ஆராய்­வ­தற்­காக இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ளார். ஆகவே அவ்­வி­ட­யங்கள் தொடர்பில் எதிர்­வரும் காலத்தில் முன்­னேற்­ற­க­ர­மான நிலை­மைகள் ஏற்­படும் சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக இவ­ரு­டைய தற்­போ­தைய விஜ­ய­மா­னது எதிர்­வரும் செப்­டம்­பவர் மாதம் ஐக்­கிய நாடுகள் சபை­யினால் வௌியி­டப்­ப­ட­வுள்ள இலங்கை குறித்த விசா­ரணை அறிக்­கையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது என்றார்.

இச்­சந்­திப்பு குறித்து கருத்து வௌியிட்ட தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சாளும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன்,

ஐக்­கிய நாடுகள் விசேட பிர­தி­நி­தி­யுடன் எமது சந்­திப்­பா­னது நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. அவ­ரு­ட­னான சந்­திப்பின் போது காணிப்­பி­ரச்­சி­னைகள், அர­சியல் கைதிகள் விடு­தலை, மீள்­கு­டி­யேற்றம், யுத்தம் நிறை­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற நிலையில் தமிழர் பகு­தி­களில் இரா­ணுவ பிர­சன்னம் உட்­பட தமிழ் மக்கள் அன்­றாடம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து விரி­வாக எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். அவை தொடர்­பாக அவர் கூடிய அவ­தா­னத்­துடன் செவி­ம­டுத்­துள்ளார். அத்­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இழப்­பீ­டுகள் வழங்­கப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளுக்­கான நீதி கிடைக்­க­வேண்டும் எனவும் அவ­ரி­டத்தில் நாம் வலி­யு­றுத்­தினோம் என்றார்.

ஐக்­கிய நாடுகள் விசேட பிர­தி­நிதி பப்லே கிரிக்­குக்கும் தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்றை தினம் காலை இடம்பெறுவதாக இருந்தபோதும் திடீரென நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு நேற்று காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாக நேற்று முன்தினம் ஐ.நா விசேட பிரதிநிதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்ததுடன் முதலமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here