மாவீரர் மாதத்தில் மரநடுகையும் மலர்க்கண்காட்சியும்!

0
215

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்ற தொனிப்பொருளில் மரநடுகையும் மலர்க்கண்காட்சியும் இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது.தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், திருமாவளவனின் ஏற்பாட்டில் தாய் மண் அறக்கட்டளையின் சார்பில் யாழ்ப்பாணத்தில்
தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விருந்தினர்களால் மலர்க்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினராக இந்தியாவில் இருந்து வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here