ஈழ அரசியல் களத் தில் ஒரு வெற்றிடம் ஏற்பட் டுள்ளது, சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றி ணைப்பதற்கு ஜனநாயக வழியில் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை தற்போது தேவை என தெரிவித்த விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அதற்கு ஏற்ற வகையில் இந்த மண்ணில் இன்று எனது கண்ணுக்கு தெரி ந்த தலைமையாக நீதியரசர் விக்னேஸ்வரனை பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மரநடுகையும் மலர்க் கண்காட்சி யும் நேற்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொட ர்ந்து உரையாற்றுகையில்,
எனது கல்லூரி பருவத்தில் இருந்து ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு என் னால் இயன்ற வரை தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்துள்ளேன். பின்னர் 8 வருடங்க ளுக்கு பின்னர் மீண்டும் இங்கு வந்துள் ளேன். ஈழ போராட்ட களத்தில் ஈடுபட்ட நூற் றுக்கணக்கானவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள்.
தமிழக மண்ணில் இன்று அரசியல் வெற்றிடம் உள்ளது என விவாதம் நடக்கிறதோ அதேபோல் ஈழ மண்ணில் அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என் பதை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.
அரசில் இல்லாமல் சமூகத் தொண்டு ஆற் றுவது என்பது கண்துடைப்பு.எமது அனை த்து நடவடிக்கைகளிலும் அசைவிலும் அரசி யல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள் ளவேண்டும். அந்த புரிதல் எமது இளைஞர் களுக்கு தேவை.இளம் தலைமுறையினர் அந்த விழிப்புணர்வினை பெற்றாக வேண்டும்.
பகைவர்களின் அசைவுகளில் கொள் கைப் பகைவர்களின் அசைவுகளில் அரசியல் உள்ளது. அதில் விழிப்புணர்வை பெற்று அரசியலில் மேலோங்கி அதை நாம் பசுமை ப்படுத்த வேண்டும். பசுமை என்பது எழுச்சி வலிமை என்று பொருள்படும்.
ஈழத்தில் இன்று அரசியல் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. தந்தை செல்வா காலத் தில் அகிம்சை வழியில் போராடக்கூடிய அர சியல் தலைமை வலுப்பெற்றது. பின்னர் பல கட்சிகள் உருவாகின.நாடாளுமன்ற தேர்த லில் பங்கேற்றன. 1970களின் பின்னர் கருவி ஏந்தி போராடக்கூடிய அரசியலை நோக்கி எம்மை இட்டுச் சென்றது.
மொழியை காப்பதற்கான உணர்ச்சி தான் இன உணர்ச்சியை எமக்கு மேலோங் கச் செய்தது. அந்த உணர்வு தான் எமக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இங்கு பெரும்பான்மை தேசியவாதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதம் என்ற சொற்றொடர் மாவீரர் நாளான கார்த்திகை 27 இல் அண்ணன் பிரபாகரனின் உரையில் இடம்பெறும். கட்டா யம் இடம்பெறும். இந்த 3 சொற்தொடரும் வலுவான அரசியலை கொண்டுள்ளது.
சிங்கள என்பது மொழிவழி மேலாதிக்க த்தை வெளிப்படுத்துகிறது. பௌத்தம் என்பது மதவழி தேசியத்தின் ஆதிக்கத்தை உருவா க்குவது. பேரினவாதம் சிங்களவர்கள் பௌத்தர்களாக இருக்கிறார்கள் என்பது மட் டுமல்ல அவர்கள் பெரும்பான்மை சமூக மாக இருக்கிறார்கள் என்பது.
எனவே அந்த சொற்றொடரில் ஆதிக்கம் இருக்கிறது. எம்மீதான ஒடுக்குமுறை உள்ளது. பெரும்பான்மை தேசியவாத அரசியல் உள்ளது. இதில் இருந்து சிறுபான்மை சமூக மாகிய தமிழர்களின் உரிமைகளை காப்பது அல்லது விடுதலையை வென்றெடுப்பது என் பதை உணர்த்துவதற்கு நாம் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டோம் என மாவீரர் நாள் உரையில் தவறா மல் பதிவு செய்து வந்தார்.
மேலும் அவர் இந்திய அரசை விமர்சிப்ப தில்லை. அந்த பேரரசு எமது விடுதலைக்கு தேவை என்பதை உணர்ந்து மாவீரர்நாள் உரையை கவனமாக ஆற்றினார்.
ஆனால் இந்திய அரசு, இலங்கை அரசு, அதற்கு ஆதரவான அமெரிக்கா, சீனா போன்ற பேரரசுகள் எமது கோரிக்கைகளை எந்த அளவு ஏற்றார்கள் எமது அவலக்குரல்களு க்கு எந்தளவு மதிப்பளித்தார்கள், உலக நாடு கள் ஒன்றிணைந்து இயங்கும் ஐ.நா பேரவை எந்த அளவு எமது கண்ணீரை துடைக்க முன்வந்தது. நாம் கொட்டிய இரத்த கறை களை துடைக்க முன்வந்தது என்பதை நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
எம்முன்னால் இருக்கும் சவால் சிதறிக் கிடக்கும் எமது தமிழ் சமூகத்தை ஒருங்கி ணைப்பது என்பது முதன்மையானது. தாய கத்தில் ஒரு பங்கு, புலம்பெயர் நாடுகளில் ஒரு பங்கு, இந்தியாவில் உள்ள தமிழ் சமூ கம் ஒரு பங்கு என தமிழர்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் நாம் ஒரே அடையாள த்தை கொண்டிருந்தாலும் ஒருங்கிணைந்து இருக்கிறோமா ஒருமித்த கருத்தில் இயங்கு கிறோமா என்பது எம் முன்னால் இருக்கும் சவாலாகவுள்ளது.
எனவே சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான அறிவான ஒரு தலைமை, பகைவர்களை தெளிவாக புரிந்து அவர்களின் ராஜதந்திரங்களுக்கு ஈடுகொடு த்து முறியடிக்கும் தலைமை, ஆயுதம் ஏந்தி போராட வாய்ப்பில்லை என்ற நிலையில் இந்த நாடாளுமன்ற ஜனநாயக வழியில் போராடு வதற்கு ஏற்ற ஒரு தலைமை, சமரசம் இல்லா மல் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை எமக்கு தேவைப் படுகிறது.
அதற்கு ஏற்ற வகையில் இந்த மண்ணில் இன்று எனது கண்ணுக்கு தெரிந்த தலை மையாக விக்னேஸ்வரனை பார்க்கிறேன். நான் இதை ஒரு சார்புபட கூறுவதாக எண்ண வேண்டாம். எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் கள அனுபவம் உள்ளது.
தமிழ் தேசியத்தை வெறும் மொழி இன உணர்ச்சியாக பார்ப்பவன் அல்ல நான். மொழி தூய்மையில் இருந்து மட்டும் தமிழ் தேசியம் பிறந்துவிடாது. இனப் பற்று இன வெறியில் இருந்து தமிழ்த் தேசியம் பிறந்து விடாது. இவை எல்லாம் அடிப்படை உண ர்வுகள்.
மொழி உணர்வு தேவை. உணர்வு என் பது முற்றும் போது பற்றும் நிலையாக மாறு கிறது. அது மொழிப் பற்றாக மாறி மேலும் வலிமையடையும் போது மொழி வெறியாக மாறுகிறது. மொழி வெறி என்பது இன்னும் ஒரு மொழி மீது வெறுப்பில் இருந்து மொழி வெறி உருவாகிறது.
எமது மொழியை நாம் நேசிக்கிறோம் என்பது அவசியமானது. மொழிப் பற்று என் பது எம்மை போர்க்குணத்துக்கு இட்டுச்செல் லும் வழி. ஆனால் அது அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் போது கோட்பாட்டு அடிப்படை யில் இயங்குவதாக உள்ளது.
தமிழ்த் தேசியம் எனும் சொற்றொடருக்குள் பிரபாகரன் தமது விடுதலை கருத்துக்களை முன்னெடுத்தார். சிங்கள பௌத்த பேரின வாதம் என்ற சொற்றொடரில் சிங்களத்துக்கு மாற்று தமிழ், பௌத்தத்துக்கு மாற்று இந்து, பேரினவாதத்துக்கு மாற்று சிறுபான்மை வாதம் என அவர் கணிக்கவில்லை.
சிறுபான்மை தேசிய இனமாக தமிழ் சமூகம் இருப்பதாக சொன்னார்.ஆனால் தமிழ் சமூகத்தை இந்து சமூகமாக எந்தவொரு இடத்திலும் அடையாளப்படுத்தவில்லை என் பதை நாம் அரசியல் ரீதியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது மதம் சார்ந்தது அல்ல, சமய சடங்குகளோடு கொடுக்கக்கூடியது அல்ல. மாறாக மக்களின் உரிமைகளோடும் மக்களின் வாழ்விடத் தின் உரிமைகளோடு, பாதுகாப்புடன் தொட ர்புடையது. அதனால் தான் தமிழீழ விடுத லைப்புலிகள் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற மூன்று சொற்தொடருடன் கோரிக்கை முன்வைத்தார்கள்.
எமக்கு என தாயகம் உள்ளது. அது வட க்கு கிழக்கு மாகாணம், எமக்கென தேசியம் உள்ளது. அது நாம் பேசும் மொழிவழி தமிழ் தேசியம், எமக்கென இறையாண்மை உள் ளது, அது தான் நாம் கட்டமைக்க விரும்பும் தன்னாட்சி நிர்வாகம். இந்த புரிதலில் இரு ந்து இந்த இயக்கம் தான் நீண்ட நெடுங்கா லம் போராடியது.
அதில் இழப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், இது எந்த காலத்திலும் ஈடுசெய்ய முடியாது. ஆனால் அது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. உலகநாடுகள் எமக்கு எதிராக இருந்ததை நாம் மறந்து விட முடியாது.
ஈழத்தமிழரின் இந்த விடுதலை போராட் டம் தமிழ்த் தேசிய விடுதலை போராட்டம் சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படக்கூடிய ஒன்றாக மாறிவிட்ட நிலையில் சர்வதேச சமூ கத்தின் ஆதரவை பெறாமல் இனி நம்மால் அந்த இலக்கை நோக்கி ஒரு அங்குலம் முன் னேற முடியாது. ஈழத்தில் இருப்பவர்கள் பய ங்கரவாதிகள் என்ற பொதுக்கருத்தை உலக அரங்கில் ஏற்படுத்திவிட்டார்கள்.
இந்த கருத்தை அழிக்க வேண்டும். தமி ழர்கள் அமைதியை ஜனநாயகத்தை விரும் புகிறோம் வாழ்வுரிமையை விரும்புகிறோம் எமது காணிகள் விடுவிக்கப்படவேண்டும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும், பௌத்த கலாசார முயற்சிகளை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக அரங்கில் உர த்து சொல்வதற்கு நாடாளுமன்ற ஜனநாயக பாதையில் வெளிப்படையாக இயங்கும் ஒரு தலைமை தேவைப்படுகிறது.
தமிழ் நாட்டில் வெற்றிடத்தை நிரப்ப நடிக ர்கள் ஓடிவருகிறார்கள் இந்த நிலை தமிழக த்தில் இருப்பது தான் வேதனைக்குரியது.
ஈழத்தில் தற்போது பிரபாகரன் இல்லை, தந்தை செல்வா இல்லை, வேறு தலைமை கள் இல்லை, இயக்க தலைமைகள் இல்லை வெற்றிடத்தை நிரப்பக்கூடிய கேள்வி உருவா கும் போது விடை கிடைக்கவில்லை. நேர்மை யான தூய்மையான தலைமை தேவை.
இளம்தலைமுறையினருக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்அரசியல் ரீதியில் நாடாளு மன்ற ஜனநாயக வழியில் நடத்திச்செல்ல வேண்டும், உலகில் எந்த தேசத்திலும் இனி ஆயுத போராட்டம் வெற்றியளிக்காது. ஆயுத போராட்டம் இன்னுமொரு பேரரசின் துணையுடன் தான் தொடங்க வேண்டும்.
எந்த அரசு வந்தாலும் அதாவது ரணிலோ மகிந்தவோ மைத்திரியோ ஆட்கள் தான் வேறு அவர்களின் கோட்பாடு ஒன்று தான் அதை மறக்கக்கூடாது. அவர்கள் பின்னால் பேரரசு இயங்குகிறது.இந்திய அரசின் ஈழத் தமிழர் தொடர்பான வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சர்வதேசத்துடன் இணக்கமாக இருந்து மானத்தை இழக்காமல் உரிமைகளை இழ க்காமல் நிலத்தை இறையாண்மையை மீட்க எப்படி போராடப்போகின்றோம்?அடுத்த தலைமுறையை எவ்வாறு வழிநடத்தப் போகிறோம் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும். இன்று எனது நம்பிக்கை க்கு உரிய நட்சத்திரம் விக்னேஸ்வரன் என நான் நம்புகிறேன். அவர் ஒரு தளிர். மாபெரும் விருட்சம் என்ற அளவு மாறுவது வரலாற்றுத் தேவை என நான் விரும்புகிறேன்.
தமிழ்த் தேசிய அரசியலை அடைகாத்து செல்வதற்கு இப்போது வெற்றிடம் உள்ளது. அதை நிரப்பும் தேவையை உணர்ந்து கட ந்த கால கசப்புகளை மறந்து நமக்கிடையி லான விமர்சனங்களை தவிர்த்து தமிழ் சமூ கத்தை ஒருங்கிணைக்க முயலவேண்டும்.
எமது ஆற்றாமையாலும் இயலாமையா லும் பகைவரை விட்டுவிட்டு நமக்குள் நம் மவர்களை விமர்சித்துக்கொண்டிருக்கி றோம். 10 ஆண்டுகளில் இதைதான் செய்து ள்ளோம்.
சிங்கள பேரினவாதத்துக்கு துணை போனவர்கள் யார், எமக்கு எதிராக அணி திரண்டவர்கள் யார், எமது கொள்கை பகை வர்கள் யார் என்பதை அறிய நாம் இன்னும் முனையவில்லை அது மிக அவசியமானது.
தமிழ்த் தேசியம் என்பது எமது வாழ்வுரி மையுடனும் அடுத்த தலைமுறையின் பாது காப்புடன் தொடர்புடையது. பேரரசுகளின் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை பெறும் போராட்டத்துடன் தொடர்புடையது. வெறும் மொழி உணர்வுடன் பார்க்காது தொலை தூர பார்வையில் எமது சந்ததியின் பாதுகாப்பை உறுதிபடுத்தக்கூடிய ஒரு அரசியல் என்பதை உணர்ந்து முன்னெடுத்து செல்வோம்.
விடுதலைச் சிறுத்தை என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தாக்கத்தில் இருந்து உருவானது என்றும் தமிழீழ மக்களின் நல னுக்காக இருக்கும். ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும் என மேலும் தெரிவித் தார்.