சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் வன்முறைகள் இடம்பெறலாம் என ஐக்கியநாடுகளிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் எச்சரிக்கைவிடுத்துள்ளர்.
இலங்கை மக்கள் உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் உள்ள தலைவர்களும் ஐநாவும் இந்த நெருக்கடிக்கு தீர்வைகாண்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்காக காத்திருக்கின்றனர் எதிர்பார்த்திருக்கின்றனர் என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
சிறிசேனவின் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் இலங்கையில் ஸ்திரமற்றநிலையை உருவாக்க கூடிய வன்முறைகளிற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்குகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசமைப்பு நெருக்கடியினால் உருவாககூடிய ஆபத்துக்கள் மிகவும் தெளிவானவை, வன்முறைகளிற்கான சாத்தியங்கள் உள்ளன எனவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் மீள்வருகை இனநல்லிணக்த்திற்கான அனைத்து முயற்சிகளிற்கும் முடிவுகட்டலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இராஜதந்திரம் எங்கே என கேள்வி எழுப்பியுள்ள சமந்தா பவர் தடைகள்,உதவிகள் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை சிறிலங்கா அறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.