சமஷ்டி வேண்டாம் என தெரிவித்து ; பதவி ஒன்றைப் பெற சுமந்திரன் முயற்சிக்கின்றார் -முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் !

0
269

நான் ஒன்பது மாகாணங்களு க்கும் சமஷ்டியே உகந்தது என்று சிங்கள மனங்களை மாற்றி வரு கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை மறந்து, வட கிழக்கில் கூட சமஷ்டி வேண்டாம் என்று கூறுகின்றார் என்றால் அதுவும் ஒற்றையாட்சியின் கீழ் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியிரு க்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கோரு கின்றார் என்றால் விரைவில் ஏதாவது பதவி யொன்றை அவர் எதிர்பார்க்கின்றார் என்று அர்த்தம்.

இவ்வாறு வடக்கு மாகாண முதலமை ச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரி வித்துள்ளார்.

அவரின் கருத்து அவரின் சுய கருத்தா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரு த்தா என்பதை கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்.

அவரின் கருத்து கூட்டமைப்பின் ஏகோபித்த கருத்தில்லை என்றால் ஒட்டு மொத்தம் அவர் போன்றவர்களை சம்பந்த னும் மற்றைய கட்சித் தலைவர்களும் சேரந்து அஸ்மின் கூறிய பாணியில் விரட்டி அடி க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட் டுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த வாரா ந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே முதல மைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது,

கேள்வி: சமஷ்டித் தீர்வு எமக்கு வேண் டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காலியில் கூறியுள்ளாரே? அது பற்றி?

பதில்:ஒரு வேளை 2015இல் அவர் தேர்தலில் நின்ற போது சமஷ்டி வேண்டாம் தூசி தட்டிய 13ஆவது திருத்தச்சட்டம் மட்டும் போதும் என்று எமது மக்களிடம் கூறி வாக் குப் பெற்றாரோ தெரியவில்லை.

அல்லது சிங்கள மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் அவர் அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை.

அல்லது காலியில் சிறப்பு அதிரடிப்படை யினரின் பலமான பாதுகாப்பின் பின்னருந் தனக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்தது போல் பாதிப்பான வரவேற்பு கிடைக்குமோ என்று பயந்து அவ்வாறு கூறினாரோ தெரிய வில்லை.

நான் ஒன்பது மாகாணங்களுக்கும் சம ஷ்டியே உகந்தது என்று சிங்கள மனங் களை மாற்றி வருகின்றேன். எனதினிய மாணாக்கர் தமிழ் மக்களுக்குத் தான் கொடு த்த வாக்குகளை மறந்து, வட கிழக்கில் கூட சமஷ்டி வேண்டாம் என்று கூறுகின்றார் என்றால் அதுவும் ஒற்றையாட்சியின் கீழ் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கோருகின் றார் என்றால் விரைவில் ஏதாவது பதவி யொன்றை அவர் எதிர்பார்க்கின்றார் என்று அர்த்தம்.

அல்லது சிங்களவர்கள் மேலுள்ள பயமே காரணம் என்றும் நினைக்கலாம். அவரின் கருத்து அவரின் சுய கருத்தா அல்லது தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா என் பதை கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்.

அவரின் கருத்து கூட்டமைப்பின் ஏகோபித்த கருத்தில்லை என்றால் ஒட்டுமொத்தம் அவர் போன்றவர்களை சம்பந்தனும் மற்றைய கட்சித் தலைவர்களும் சேர்ந்து அஸ்மின் கூறிய பாணியில் விரட்டி அடிக்க வேண்டும்!

ஐம்பதுக்கு ஐம்பது கோரி, சமஷ்டி கோரி, தனி நாடு கோரிவந்த தமிழருக்கு 13ஆம் திருத்தச் சட்டத்தை மட்டும் தந்தால்; போதும் என்று அவர்கள் சார்பில் கூறுவதற்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும் அவருக்கு என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here