தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் முதல்நாள் நிகழ்வுகள்!

0
507


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் முதல்நாள் நிகழ்வுகள் இன்று (07) பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சார்சேலில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து நாளை 08.07.2018 மற்றும் 14 ஆம் நாள்களில் தெரிவுப் போட்டிகளும் 15 ஆம் நாள் இறுதிப்போட்டியும் காலை 9.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளன.
இன்று காலை ஆரம்பநிகழ்வாக 16.11.2007 அன்று மன்னார் நீலச்சேனைப் பகுதியில் சிறீலங்கா படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன் தழல்வீரன் அல்லது சிலம்பரசனின் சகோதரி லெப்டினன் சங்கரின் நினைவுத் தூபியில் சுடர்வணக்கத்தையும், மலர்வணக்கத்தையும்  தொடர்ந்து பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டுத்துறை போட்டி முகாமையாளர் திரு இராஜலிங்கம் ஆசிரியரினால் கழக பொறுப்பாளர்களுக்கு போட்டிகளின் நடைமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.


இன்று தெரிவுப் போட்டிகளும் , சில இறுதிப் போட்டிகளும் இடம் பெற்ற சமவேளையில் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கிவைக்கப் பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here