7 பேரின் விடுதலை விண்ணப்பம் மீண்டும் நிராகரிப்பு !

0
280

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் மனுவை இந்தியக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனா். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு இந்தியக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பி இருந்தது.

இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் 7 பேரையும் விடுதலை செய்ய எதிா்ப்பு தெரிவித்த நிலையில் விடுதலை செய்யக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து செய்து ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக இது போன்ற முக்கியத் தருணங்களில் மத்திய உள்துறை அமைச்சகங்களின் கருத்தை கேட்ட பின்பே குடியரசுத் தலைவா் தனது முடிவை உறுதி செய்வாா்.
தமிழக அரசின் கோரிக்கையும்இ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கொள்கையும் ஒத்துப் போகாததால் விடுதலை கோரிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களில் தமிழக அரசு சாா்பில் 7 பேரையும் விடுதலை செய்யக் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டிருந்த நிலையில் இரு முறையும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here