தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரி.வசந்தராசா ஆகியோரின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இடம் பெற்றது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.கஜேந்திரன் உட்பட தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் மக்கள் பேரைவயின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் உரை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் ஆதி குடியினரின் வழிவந்தவர்கள் என்பதால், தமிழர்களுக்கு அவர்கள் வாழும் இடங்களில் சுயாட்சி கோர சட்டப்படி உரித்து இருக்கின்றது என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் இரண்டாம் மட்ட அல்லது மூன்றாம் மட்ட இளைஞர்களை, யுவதிகளை தலையெடுக்க விடாது அவர்களைத் தட்டித் தட்டி வைப்பதைத் தாம் கண்டிருப்பதாக சி.வி.விக்னேஷ்வரனின் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் தகைமை அற்றவர்களாக இருக்கும் போது, தம்மிடத்தை மற்றவர்கள் பிடித்துக்கொள்வார்களோ என்று அவர்கள் சந்தேகிப்பதாக தனது உரையில் அவர் கூறியுள்ளார்.
தகைமையுடையவர்கள் மேலெழுவதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை செய்ய வேண்டும் எனவும் இளைஞர், யுவதிகளை அடையாளம் கண்டு தம்முடன் இணைத்துக்கொள்ள முன் வர வேண்டும் எனவும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.