ஐ.நா. தலைமையிலான பன்னாட்டுச் சட்டப் பொறிமுறைக்குள் முற்படுத்தப்பட வேண்டும் !

0
130


இலங்கை ஒப்புக் கொண்டு, ஏற்றுக்கொண்ட ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தவில்லை. இலங்கை அரசை ஐ.நா. தலைமையிலான பன்னாட்டுச் சட்டப் பொறிமுறைக்குள் முற்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் வடக்கு மாகாண சபை கோரியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினர் மாகாணசபையின் நேற்றைய அமர்வில் கொண்டுவந்தார். வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அதை வழிமொழிந்தார். உறுப்பினர்கள் அனைவரது ஆதரவுடன் இந்தத் தீர்மானத்தின் பிரதிகள் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அனுப்பப்படவுள்ளன.
2015ஆம் ஆண்டு செப்­ரெம்­ப­ரில் நடந்த ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் அமர்­வில், இலங்­கை­யில் நல்­லி­ணக்­கம், பொறுப்­புக்­கூ­று­தல், மனித உரி­மை­கள் முத­லி­ய­வற்றை ஊக்­கப்­ப­டுத்­தல் என்ற தலைப்­பி­லான தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டது. அதற்கு இலங்கை அர­சும் இணை அனு­ச­ரணை வழங்­கியது.
மனித உரி­மை­கள் மற்­றும் பன்­னாட்டு மனித நேயச் சட்­டங்­க­ளை­யும் மீறு­தல் மற்­றும் துர்­ந­டத்தை செய்­தது தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிப்­ப­தற்­கென பன்­னாட்டு நீதி­ப­தி­கள், சட்­ட­வா­ளர்­கள், வழக்­குத் தொடு­நர்­கள், விசா­ர­ணை­யா­ளர்­கள் அடங்­க­லான பக்­கச் சார்­பற்ற சட்­ட­நெறி பொறி­ய­மைப்­பொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான கடப்­பாட்டு நிலைக்­குள் இலங்கை தன்னை உட்­ப­டுத்தி கொண்­டது. ஆனால் அந்­தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது தொடர்­பாக எந்த ஒரு அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கை­யும் இலங்கை அரசு எடுக்­கத் தவறி விட்­டது.
இலங்கை அரச தலை­வர், தலைமை அமைச்­சர் மற்­றும் முது­நிலை உறுப்­பி­னர்­கள் இந்­தத் தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப் போவ­தில்லை என்று தெளி­வா­க­வும் ஆணித்­த­ர­மா­க­வும் வெளிப்­ப­டுத்தி உள்­ள­னர்.
ஒரு சமத்­து­வ­மான அர­சி­யல் தீர்வை கண்டு கொள்­வ­தற்­கான விசு­வா­ச­மான நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வ­தி­லி­ருந்து அரசு தவ­றி­யுள்­ளது. சிங்­கள அர­சி­னு­டைய ஒடுக்கு முறை மனப்­போக்கை எடுத்­துக்­காட்­டும் விதத்­திலே, தமிழ் மக்­கள் உள்­ளிட்ட பௌத்­தர்­கள் அல்­லாத மக்­கள் அனை­வ­ரும் பௌத்த மதத்­தி­னு­டைய முதன்மை நிலையை கட்­டா­யம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று இப்­போ­தும் வலி­யு­றுத்­து­வ­தை­யும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
இலங்­கை­யா­னது தானே ஏற்­றுக்­கொண்ட கடப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்த மற்­றும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபைத் தீர்­மாத்தை நடை­மு­றைப்­ப­டுத்த இய­லா­மல் அல்­லது விரும்­பா­மல் இருப்­ப­தால் இந்­தச் சபை­யா­னது இதனை ஐ.நா.வின் தலை­மை­யி­லான ஒரு பன்­னாட்டு சட்ட நெறிப் பொறி­ய­மைப்­புக்கு முற்­ப­டுத்­து­மாறு ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யின் உறுப்பு நாடு­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றது.
உண்மை நீதி மற்­றும் சமத்­து­வ­மான அர­சி­யல் தீர்வு இல்­லா­மல் இலங்­கை­யிலே நல்­லி­ணக்­கமோ அல்­லது நிரந்­த­ர­மான சமா­தா­னமோ சாத்­தி­ய­மில்லை என்று இந்­தச் சபை நம்­பு­கின்­றது.
2015 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் இலங்கை மீதான விசா­ரணை அறிக்­கை­யில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருப்­பது போல் ரோம் சட்­டத்தை அங்­கீ­க­ரிக்க இலங்­கையை வற்­பு­றுத்­தும்­படி ஐ.நா.வையும் பன்­னாட்­டுச் சமூ­கத்­தை­யும் சபை கோரு­கி­றது.
தமிழ் மக்­கள் இலங்­கை­யில் இணைந்த வடக்கு – கிழக்­குப் பிர­தே­சங்­க­ளில் தமது மரபு வழி தாய­கத்தை கொண்­டி­ருக்­கும் ஒரு மக்­கள் இனம் என்­ப­தை­யும் அவர்­கள் சுய நிர்­ணய உரி­மை­கள் கொண்­ட­வர்­கள் என்­ப­தை­யும் கண்­டு­ணர்ந்­தி­ருக்­கும் இந்­தச் சபை­யா­னது ஒரு அர­சி­யல் தீர்­வுக்­காக இணக்க நடு­வ­ராக செயற்­ப­டும் படி பன்­னாட்டு சமூ­கத்தை அதி­லும் குறிப்­பாக அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம் மற்­றும் இந்­தி­யாவை கோரு­கின்­றோம்.- என்று தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here