உள்­நாட்டு மருத்­து­வ­மும் பிற­நாட்­ட­வ­ரால் அப­க­ரித்­துச் செல்­லப்­ப­டு­வதை நாம் தெரிந்து கொள்ள வேண்­டும்!

0
124


எமது நாடு­க­ளி­லி­ருந்தே பல கலை வடி­வங்­கள் பிற­நாட்­டா­ ரால் திரு­டிச் செல்­லப்­பட்டு இன்று அவர்­க­ளின் நாட்டுக் கலை­வ­டி­வங்­க­ளாக அவை எமக்கு எடுத்­துக் காட்­டப்­ப­டு­கின்­றன.
உள்­நாட்டு மருத்­து­வ­மும் பிற­நாட்­ட­வ­ரால் அப­க­ரித்­துச் செல்­லப்­ப­டு­வதை நாம் தெரிந்து கொள்ள வேண்­டும். முன்­னர் இதை அறி­யாது பறி­கொ­டுத்­தோம். இப்­போது பணத்­துக்­காக அறிந்­தும் பறி­கொ­டுக்­கின்­றோம். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சித்த மருத்­துவ அல­கும், வடக்கு மாகாண சுதேச மருத்­து­வத் திணைக்­க­ள­மும், இந்­தி­யா­வின் ஆயுஸ் அமைப்­பும் இணைந்து நடத்­தும் பன்­னாட்டு ஆய்வு மாநா­டும், கண்­காட்­சி­யும் கைத­டி­யில் நடை­பெ­று­கின்­றது. அதில் நேற்­று(25) கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே முத­ல­மைச்­சர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்த­தா­வது:
சித்த மருத்­து­வம் என்­பது முழுக்க முழுக்க மூலி­கை­க­ளா­லும் மூலி­கைக் குண­மு­டைய மரப்­பட்­டை­க­ளா­லும், சுகா­தா­ரத்­துக்கு உத­வக்­கூ­டிய சரக்கு வகை­கள் எண்­ணெய் போன்­ற­வற்­றால், எந்­த­வித பக்­க­வி­ளை­வு­க­ளும் ஏற்­ப­டா­மல் ஆற்­றப்­ப­டு­கின்ற வைத்­திய முறை­யா­கும்.
இந்த வைத்­திய முறைமை இற்­றைக்கு பல நூற்­றாண்­டு­க­ ளுக்கு முன்­னர் மேலை நாட்டு ஆங்­கி­லேய வைத்­திய முறை­மை­கள் எமது மண்­ணில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டாத காலத்­தில் இருந்தே நடை­மு­றை­யில் இருந்­துள்­ளது.
ஆங்­கில வைத்­திய முறை­மை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு மெல்ல மெல்ல ஆசிய நாடு­க­ளில் பர­வத் தொடங்­கி­ய­தும் மக்­க­ளுக்கு குடி­நீர்­க­ளில், குளி­கை­கள், பத்­திய உணவு வகை­க­ளைப் பின்­பற்­றும் செயற்­பா­டு­க­ளில் ஆர்­வம் குன்­றத் தொடங்­கி­யது.
புதிய முறை­யின் இலகு தன்­மையை மக்­கள் விரும்­பி­ய­தா­லும், உட­னடி நிவா­ர­ணி­யாக இந்த இர­சா­ய­னக் கல­வை­கள் பயன்­பட்­ட­தா­லும், எமது பாரம்­ப­ரிய சித்த வைத்­திய முறை­மை­க­ளைக் கைவிட்டு மேலைத்­தேய வைத்­திய முறை­மை­களை எமது மக்­கள் பின்­பற்­றத் தொடங்­கி­னர்.
நாம் அறிந்­து­கொள்­ளாத அல்­லது புரிந்து கொள்­ளாத எமது வைத்­திய முறை­க­ளின் பக்­க­வி­ளை­வற்ற, உட­லுக்கு எந்த தீங்­கும் விளை­விக்­காத வைத்­திய முறை­களை நன்கு புரிந்­து­கொண்ட மேலை­நாட்­ட­வர்­கள் தமது தீராத நோய்­க­ளுக்­கான வைத்­திய உத­வி­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காக இந்­தியா போன்ற நாடு­க­ளுக்கு படை­யெ­டுக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர்.
அவர்­க­ளின் நாட்­டில் கிடைத்த இர­சா­ய­னக் கல­வை­களை குளி­கை­க­ளா­க­வும், மருந்­துக் கல­வை­க­ளா­க­வும் எமக்கு அனுப்­பி­விட்டு தமது தேவைக்கு எமது நாட்டை நோக்கி மூலிகை மருத்­துவ சிகிச்­சை­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காக வரத்­தொ­டங்­கி­னர்.
சித்த மருத்­து­வத்­தின் அண்­மைக்­கால வளர்ச்சி பல நூற்­றுக் கணக்­கான மாண­வர்­களை சித்த மருத்­து­வத் துறை­யில் உள் நுழைப்­ப­தற்­கும் மருத்­து­வக் கற்கை நெறி­களை சிறப்­பாக நிறை­வேற்றி மருத்­துவ சேவை­யில் ஈடு­ப­ட­வும் வழி­வ­குத்­துள்­ளது. அது எமது பாரம்­ப­ரிய வைத்­திய முறை­மைக்கு கிடைக்­கப் பெற்ற ஒரு அங்­கீ­கா­ரம் எனத் தெரி­விப்­ப­தில் மகிழ்­வ­டை­கின்­றேன்.
ஆனால் சித்த வைத்­தி­யம், ஆயுர்­வேத வைத்­தி­யம், சித்­தா­யுர்­வேத வைத்­தி­யம் என்று எமது சுதேச வைத்­திய முறை­கள் பங்கு போடப்­பட்டு போட்டி பொறா­மை­க­ளு­டன் வளர்ந்து வரு­வ­தைக்­கண்டு மன­வ­ருத்­தப்­ப­டு­கின்­றேன்.
எமது வைத்­திய முறை­மை­கள் பற்றி மேலும் மேலும் ஆரா­யுங்­கள். அவற்­றின் பாவ­னையை முடிந்த அளவு இல­கு­ப­டுத்­துங்­கள். எமது வருங்­கால சந்­த­தி­யி­னர் எது­வித பக்க விளை­வு­மற்ற, உட­லுக்கு நன்மை பயக்­கக் கூடிய சுதேச மருத்­துவ உத­வி­யு­டன் தொற்று நோய், தொற்றா நோய்த் தாக்­கங்­க­ளில் இருந்து விடு­பட்டு ஒரு ஆரோக்­கி­ய­மான சமூ­க­மாக வளர்ந்து, வாழ்ந்து வர வாழ்த்­து­கின்­றேன்–என்­றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here