மனிய உரிமை மீறல் குற்றங்களுக்காக சிறீலங்கா மீது பன்னாட்டு விசாரணை!

0
156

இலங்­கை­யில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­கள் மற்­றும் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­குப் பொறுப்­புக்­ கூ­று­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அதன் மீது உலக சட்­டத்­தின் ஆட்­சியை நிலை­நி­றுத்­தும் வகை­யி­லான (அதா­வது பன்­னாட்டு நீதி விசா­ரணை போன்ற ஒன்று) தெரி­வு­கள் உட்­பட மாற்று வழி­களை உலக நாடு­கள் ஆரா­ய ­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹூசைன் .
இலங்­கை­யில் பொறுப்­புக்­கூ­ற­லை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஊக்­கு­விக்­கும் வகை­யில் சிறீலங்கா அர­சை­யும் பங்­கா­ளி­யா­கக் கொண்டு 2015ஆம் ஆண்­டில் நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா. மனித உரி­மை­கள் சபைத் தீர்­மா­னம் 30/1ஐ நடை­மு­றைப்­ப­டுத்த கடந்த ஆண்டு சிறீலங்காவுக்கு மேலும் 2 ஆண்டு கால அவ­கா­சம் கடந்த ஆண்­டில் வழங்­கப்­பட்­டது. இந்த இடைப்­பட்ட காலத்­தில் ஏற்­பட்ட முன்­னேற்­றங்­கள் தொடர்­பான தனது இடைக்­கால அறிக்­கையை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் நேற்று ஜெனீ­வா­வில் முன்­வைத்­தார்.
2015ஆம் ஆண்­டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தும்­படி வலி­யு­றுத்தி 2017ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தில் ஆணை­யா­ள­ரின் இடைக்­கால அறிக்கை சபை­யின் இந்த அமர்­வில் முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டும் என்று கேட்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­படி அறிக்கை நேற்று சபை­யில் முன்­வைக்­கப்­பட்­டது.
10 பக்­கங்­க­ளைக் கொண்ட அந்த அறிக்­கை­யில், இலங்­கை­யின் மனித உரி­மை­கள் நிலமை, நிலை­மாறு கால நீதி தொடர்­பில் ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் கொழும்­பின் செயற்­பா­டு­கள் என்­பன அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன.
அறிக்­கை­யின் பெரும் பகுதி தீர்­மா­னத்தை நிறை­வேற்­றும் கடப்­பாட்­டில் இருந்து சிறீலங்கா வில­கி­யி­ருப்­பதை விளக்­கிக் கூறு­வ­தாக உள்­ளது. அதே­நே­ரத்­தில் இடம்­பெற்­றுள்ள மிகச் சில முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­க­ளை­யும் அறிக்கை பாராட்­டி­யுள்­ளது.
அறிக்­கை­யின் இறு­தி­யில் ஆணை­யா­ளர் தெரி­வித்­துள்ள முடி­வு­க­ளும் பரிந்­து­ரை­க­ளும் என்ற பகு­தி­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
2015ஆம் ஆண்­டி­லி­ருந்து ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அலு­வ­ல­கத்­து­ட­னும் ஐ.நா. மனித உரி­மை­கள் தொடர்­பான பொறி­மு­றை­யு­ட­னும் இலங்கை அரசு காத்­தி­ர­மா­கத் தொடர்­பு­பட்­டி­ருப்­பதை ஆணை­யா­ளர் வர­வேற்­ற­கி­றார். ஐ.நா. மனித உரி­மை­கள் சபைத் தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கும் முக்­கிய இலக்­கு­களை சிறீலங்கா அரசு நிறை­வேற்­று­வ­தன் ஊடாக இந்­தக் காத்­தி­ர­மான ஒத்­து­ழைப்பு மேலும் வலுப்­பெ­ற­வேண்­டும்.
இதனை 2017ஆம் ஆண்­டி­லும் ஆணை­யா­ளர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். ஆனால், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 30/1 தீர்­மா­னத்­தின் கீழ் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்ட நிலை­மா­று­கால நீதிக்­கான நட­வ­டிக்­கை­கள் கிட்­டத்­தட்ட ஒரு வரு­டத்­திற்­கும் மேலாக முடங்­கிப்­போய்­விட்­டன.
இருந்­தி­ருந்­து­ விட்டு மேற்­கொள்­ளப்­ப­டும் மிகச் சில நம்­பிக்­கை­யூட்­டும் நட­வ­டிக்­கை­கள் போது­மா­ன­வை­யல்ல, தெளி­வற்­ற­வை­யும்­ கூட. அத்­தோடு ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்க உரு­வாக்­கப்­பட்ட கட்­ட­மைப்பு திட­மா­ன­தாக இல்லை என்­ப­து­டன் அது முன்­னோக்கி நகர்­வ­தற்­குத் தேவை­யான அர­சி­யல் ஆத­ர­வும் அதற்­குக் கிடைக்­க­வில்லை.
பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் மறு­சீ­ர­மைப்பு ஆகிய விட­யங்­க­ளில் காணப்­ப­டும் போதா­மை­களை தொடர்­பான தனது கரி­ச­னையை, கவ­லையை ஆணை­யா­ளர் 2015ஆம் ஆண்டு முதல் தனது அறிக்­கை­க­ளில் வலி­யு­றுத்தி வந்­தா­லும் நாட்­டின் மனித உரி­மை­கள் விட­யத்­தில் பொது­வாக ஏற்­பட்ட முன்­னேற்­றத்­தைப் பார்த்து ஊக்­க­ம­டைந்­தி­ருந்­தார்.
ஆனால், 2017ஆம் ஆண்டு இனங்­க­ளி­டையே அவ்­வப்­போது பதற்­றம் ஏற்­பட்­ட­து­ட­னும் சிறு­பான்­மை­யி­னர் மீதான தாக்­கு­தல்­க­ளு­ட­னும் கடந்­துள்­ளது. இது ஆணை­யா­ள­ரின் ஊக்­கத்தை முற்­றா­கச் சிதைத்­து­விட்­டது.
கவ­லைப்­ப­டுத்­தும் இத்­த­கைய சம்­ப­வங்­க­ளில் பல­வற்­றை­யும் சாத­க­மான திசை நோக்­கித் திருப்பி சிறீலங்கா அரசு சமா­ளித்­து­விட்­டா­லும் கிட்­டத்­தட்ட 10 வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை மித­மிஞ்­சிய வன்­மு­றை­க­ளால் பாதிக்­கப்­ப­டும் நாட்­டில் இது­போன்ற வன்­மு­றை­கள் பிரச்­சி­னைக்­கு­ரி­ய­வை­யையே. அதி­லும் குறிப்­பாக வெறுப்­புப் பேச்சு, தவ­றான தக­வல்­கள், சமூக வலைத்­த­ளங்­கள் ஊடான உணர்­வுக் கிளர்­வு­கள், அர­சி­யல் திரி­பு­ப­டுத்­தல்­கள் என்­ப­வை­யும் சேரும்­போது இது மிக­வும் சிக்­க­லுக்­கு­ரி­யதே.
சித்­தி­ர­வ­தை­கள், கண்­கா­ணிப்­புக்­கள் தொடர்­பா­கத் தொட­ரும் குற்­றச்­சாட்­டுக்­கள் மற்­றும் காணி விடு­விப்பு, பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­திற்­குப் பதி­லா­கப் புதிய சட்­டத்­தைக் கொண்டு வரு­வது, அந்­தச் சட்­டத்­தின் கீழான தடுத்து வைப்­பு­க­ளுக்­குத் தீர்வு காண்­பது போன்­ற­வற்­றின் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தில் காணப்­ப­டும் போதா­மை­கள் ஆகி­யன அர­சின் முக்­கிய மறு­சீ­ர­மைப்­புக் முயற்­சி­க­ளுக்கு விரோ­தி­யா­கக் காணப்­ப­டு­கின்­றன.
அந்த முயற்­சி­க­ளுக்­கான முக்­கி­ய­மான விட­யங்­க­ளா­க­வும் இவை காணப்­ப­டு­கின்­றன. எனவே சிறீலங்கா பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் நல்­லி­ணக்­கம் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஊக்­கு­விப்­ப­தில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை தொடர்ந்­தும் ஒரு வகி­பா­கத்­தைக் கொண்­டி­ருக்­க­வேண்­டும் என்று ஆணை­யா­ளர் கோரு­கின்­றார்.
அத்­தோடு பொறுப்­புக்­கூ­றலை நிலை­நாட்­டும் வகை­யில் உல­கச் சட்­டங்­க­ளின் ஆட்­சியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட வேறு வழி­வ­கை­கள் குறித்­தும் சபை­யின் உறுப்பு நாடு­கள் ஆரா­ய­வேண்­டும்- என்­றும் தெரிவிக்கப் பட்டுள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here