வெளிநாட்டில் பெற்ற கடனில் ஒன்­பது ரில்­லி­யன் ரூபாக்­க­ளுக்கு கணக்கு இல்லை!

0
200

கடந்த பத்து வருட காலத்­தில் வெளி­நாட்­டி­லி­ருந்து பத்து ரில்­லி­யன் ரூபா அதா­வது, ஒரு இலட்­சம் கோடி ரூபா கட­னா­கப் பெறப்­பட்­டுள்­ளன. ஆனால் அவற்­றில் ஒன்­பது ரில்­லி­யன் ரூபாக்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­ய­வில்லை. என சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
திறை­சே­ரி­யில் இதற்கு ஓர் ஆதா­ர­மும் இல்லை. கணக்­கும் இல்லை. அமைச்­ச­ர­வை­யில்­கூட முழு வெளி­நாட்­டுக் கடன் எவ்­வ­ளவு பெற்­றி­ருக்­கி­றோம் எனக் கேட்­டுள்­ளேன். ஆனால் பதில் இல்லை என்றும் திறை­சே­ரி­யின் அனு­ம­தி­யின்றி அர­சின் அனு­ம­தி­யின்றி அந்­தப் பணம் தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்­குச் சென்­றுள்­ளது. மிக­வும் நுட்­ப­மாக இது நடந்­துள்­ளது. அர­சின் வரு­மா­னம், பொரு­ளா­தா­ரம் வீழ்ச்­சி­ய­டைய இது­வும் ஒரு கார­ணம். வெளி­நாட்­டுக் கடன்­கள் குறித்து வரவு – செல­வுத் திட்­டத்­தில் குறிப்­பிட்­டா­லும் அவற்­றுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­ய­வில்லை.
இவற்­றுக்­கும் ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிப்­பதா? ஆணைக்­கு­ழுக்­களை நிய­மிப்­ப­தற்கு அள­வில்­லையா? இவற்­றுக்கு ஒரு தீர்­வைக் காண­வேண்­டும்’’ என்று மேலும் தெரி­வித்­துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here