இலஞ்ச, ஊழல் அதிகாரிகள் வீரவன்சவை 5 மணிநேர விசாரணை!

0
107

mainpic1_Lஅரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளர் நாமல் ராஜபக்ஷ என்ற சட்டத்தரணி தனக்கு எதிராக செய்துள்ள முறைப்பாட்டுக்கமைய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்னிடம் நேற்று விசாரணை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுக் காலை 9.30 அளவில் வீரவன்சவிடம் விசாரணைகளை ஆரம்பித்தது டன் மதிய உணவுக்காக விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

இதன் போது ஆணைக் குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே வீரவன்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மதிய உணவுக்காக விசாரணை நிறுத்தப்பட்ட போது வீரவன்சவிடம் மூன்று மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தும் தேவை இருப்பதாக அதிகாரிகள் கூறினர் எனவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

சதிகாரர்கள் தனக்கெதிராக முன்வைத்த முறைப்பாடுகளுக்கமைய தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று விசாரணைக்காக அழைக்கப்பட்டு பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக் கையில் ஈடுபடும் நபரே இவ்வாறு தனக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று மாத்திரம் நான் 5 மணித்தியாலங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் என முன்னாள் அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here