யூரியா உரம் இன்மையால் அம்பாறை விவசாயிகள் பாதிப்பு!

0
156

யூரியா உரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக அம்பாறை – நாமல் தலாவ கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்றிருந்த விவசாயிகள் பலர் வெறுங்கையுடன் திரும்பினர்.
10,000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பினை நிர்வகிக்கும் நாமல் தலாவ கமநல சேவைகள் திணைக்களத்திடம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு வெறுமனே 250 பைகள் உரம் மாத்திரமே இருந்தது.
உரப்பற்றாக்குறை தொடர்பில் உரக் கூட்டுத்தாபனத்திடம் வினவியபோது, தற்போது 7000 தொன் உரத்தினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 72,000 தொன் உரத்துடன் கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், உரத்தின் அளவு பெரும்போக நெற்செய்கைக்கு போதுமானதாக இல்லை என உரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here