சவூதியில் உள்ள, இலங்கையர்கள் அச்சமடைந்துள்ளனரா?

0
280

சவூதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் அச்சமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யேமனின் ஹயுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக சவூதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை சவூதி வெற்றிகரமாக முறியடித்து வருகின்றது.

குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி மற்றும் இந்த மாதம் 19ம் திகதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் வானிலேயே வைத்து முறியடிக்கப்பட்டிருந்தது.

எனினும் அடிக்கடி இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் இந்த ஆபத்தினை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சவூதி அரேபியாவில் சுமார் 190000 இலங்கையர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது அந்நாட்டு மற்றும் இலங்கை அதிகாரிகளின் கடமையாகும் என சவூதி வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19ம் திகதி ரியாத் நகர் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும் பாரிய வெடிச் சத்தத்துடன் வானில் வெளிச்சம் தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமோ சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகமோ இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here