மணியம் தோட்டம் கொலை – புலனாய்வாளர் இருவரினது மறியல் நீடிப்பு!

0
178

அரி­யாலை மணி­யந்­தோட்­டம் பகு­தி­யில் இளை­ஞ­ரொ­ரு­வர் சுட்­டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பா­கக் கைது செய்­யப்­பட்ட சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யின் புல­னாய்வாளர் இரு­வ­ரி­ன­தும் விளக்­க­ம­றி­யல் எதிர்­வ­ரும் 14ஆம் திக­தி­வரை நீடிக்­கப்­பட்டுள்­ளது.
அரி­யாலை கிழக்கு மணி­யம்­தோட்­டம் வசந்­த­பு­ரம் 1ஆம் குறுக்கு வீதிப் பகு­தி­யில் கடந்த 22.10.2017 அன்று , 24 வய­து­டைய டொன்­பொஸ்கோ டினே­சன் என்­ப­வர் துப்­பாக்­கிச் சூட்­டுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­தார்.
கொலைச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் யாழ்ப்­பாண தலை­மை­ய­க காவல் துறையினரால் ­கொள்­ளப்­பட்டு பின்­னர் காவல் துறை மா அதி­ப­ரின் பணிப்­பின் பேரில் கொழும்பு குற்­றத் தடுப்பு பிரி­வி­ன­ரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.
கொலை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யின் புல­னாய்வினர் உள்­பட இரு­வர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற கட்­ட­ளை­யின் பிர­கா­ரம் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.
இந்த வழக்கு யாழ்ப்­பாண நீதி­மன்ற நீதி­வான் சின்­னத்­துரை சதீஸ்­த­ரன் முன்­னி­லை­யில் நேற்று இடம்­பெற்­றது. சந்­தே­க­ந­பர்­கள் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். குற்­றப் பு­ல­னாய்­வுப் பிரி­வி­ன­ரின் விசா­ர­ணை­கள் தொடர்­வ­தாக மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. அத­னால் சந்­தே­க­ந­பர்­கள் இரு­வ­ரை­யும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் கட்­ட­ளை­யிட்­டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here