வருமானத்திற்கு அதிக சொத்து; விமல் வீரவன்ச மீது வழக்கு!

0
318

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாளும் அமைச்சருமான விமல் வீரவன்சவிற்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த ஆறு வருட காலப் பகுதியில், சம்பாதிக்க முடியாத வகையில் சுமார் ரூபா 75 மில்லியன் (ரூபா 7.5 கோடி) பணம் மற்றும் சொத்துகளுக்கு அதிபதியாகியுள்ளமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகள் 39 தொடர்பில் அவருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டரீதியான வருமானத்தை தாண்டி சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாக விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

39 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சட்டரீதியான வருமானத்தை தாண்டி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவை வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றம் என்பதுடன்,விமல் வீரவன்சவுக்கு எதிராக 32 சாட்சியாளர்களும் 93 சாட்சிப் பொருட்களும் பெயரிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here