தாழமுக்கம்: கடும் மழை, காற்று; தென்பகுதியில் அவலம்!

0
182

தாழமுக்கம் காரணமாக தற் போது இலங்கையின் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக காலி, மாத் தறை, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் பதுளை, நுவரெலியபகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடுமை யான காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கொழும்பு, தெஹிவளை பகுதிகளில் நேற்றிரவு கடுமையான காற்று வீசியது. இத னால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு இருளில் மூழ்கியது.
பல இடங்களில் மரங்கள் முறிந்து விழு ந்ததால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ள துடன் வீதிகளில் மர முறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள் ளது. இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்து ள்ளனர்.
அடுத்த 24 மணி நேரம் வரை குறித்த காலநிலை தொடருமென்றும் மீனவர்கள் கட லுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை அவதான மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு அருகே உரு வாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமாரி கடற்கரைப்பகுதிக் குள் நகர்வதால் ஈரப்பதம் ஏற்பட்டு வடக்கில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய் யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளையும் மழை பெய்யலாம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here