காணாமல் போன அண்ணன், தங்கையின் சடலங்கள் ஆற்றிலிருந்து மீட்பு!

0
223

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில், காணாமல் போன அண்ணனும் தங்கையும் ஆற்றிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் மூன்று தினங்களுக்கு முன் காணாமல் போனதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. கொழும்பு கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28),  பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய அண்ணன், தங்கை இருவருமே காணாமல் போயிருந்தனர்.
பின்னர் இவ்விருவரதும் சடலங்கள் கொழும்பிலிருந்து வரவழைக்ககப்பட்ட சுழியோடிகளால் நேற்று(28) ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன. இவ்விருவரும் தற்கொலை செய்திருப்பதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சமபவம் பற்றி தெரியவருவதாவது:
தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக இவர்கள் கடந்த (23) பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனத்தில் சென்றுள்ளனர்.
இவ்விழா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்ற இவர்கள் கடந்த (26) முதல் காணாமல் போனதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் (27) உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
கையடக்க தொலைபேசி ஒன்று காணாமல் போனது தொடர்பாக பொலிஸில் முறைபாடு செய்து விட்டு வருவதாக கூறிச் சென்ற அண்ணன்,தங்கை ஆகியோரே காணாமல் போனதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் பயணம் செய்த கெப் ரக வாகனம் கவரவில பெரும்பான்மை பாடசாலை ஒன்றிற்கு அருகில் ஆளின்றி காணப்பட்டது.
பாடசாலை சென்ற மாணவர்கள் சிலர் இது பற்றி காணாமல் போனோரின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்
இது தொடர்பில் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து (28) மஸ்கெலியா பொலிஸார் மோப்ப நாயுடன் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மோப்ப நாய் கவரவில ஆற்று பகுதியை நோக்கி சென்றதால் அண்ணன்,தங்கையர் இருவரும் ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டது.
அதேவேளை காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படும் மேற்படி யுவதி மற்றும் இளைஞனின் காலணி, கைக்குட்டை, ஆடைகள் ஆகியன ஆற்றுப்பகுதியிலும், கெப் ரக வாகனத்திலும் காணப்படுவதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
குறித்த ஆற்று பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள கொழும்பிலிருந்து சுழியோடிகள் மற்றும் கடற்படையினர் வரவழைக்கப்பட்டு நேற்று(28) தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போதே இவ்விருவரது சடலங்களையும் சுழியோடிகள் மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here