மல்வத்தை வயல் வெளியில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

0
258

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள மல்வத்தை-03, மஜீட்புரம் பெரிய சாளம்பைக்கேணி வயல் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வீரமுனையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
வீரமுனையைச் சேர்ந்த 61 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான கந்தப்பர் கணேசபிள்ளை என்பவரே இவ்வாறு யானை தாக்குதலுக்குள்ளாகி இறந்தவராவார்.
நேற்றுக் காலை தனது வீட்டிலிருந்து வயலுக்கு வரப்பு வேலைக்கு சென்ற வேளையிலேயே மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியதில் இவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here