மாவீ­ரர் துயி­லும் துயி­லும் இல்­லங்­களை பூங்­கா­க்களாக்க வடக்கு மாகாண சபை­யில் எதிர்ப்பு!

0
334

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள தமிழீழ மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­களை வேறு­வ­டி­வத்­தில் மாற்­று வதை விடுத்து, அவை மீள­வும் சீர­மைக்­கப்­ப­ட­ வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை­யில் வலி­ யுறுத்தப்­பட்­டது.
வடக்கு மாகா­ண­ச­பை­யின் 106ஆவது அமர்வு அவைத் தலை­வர் தலை­மை­யில் நேற்று (28) இடம் பெற்­றது. இந்த அமர்­வில் அக்­கரை கடற்­க­ரையை சுற்­றுலாத் தள­மாக்­கு­வது தொடர்­பாக கருத்­து ­க­ளைப் பதி­வு­செய்­யும்­போதே இந்­தக் கோரிக்கை முன்வைக்­கப்­பட்­டது.
இது­தொ­டர்­பாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் அஸ்­மின் மற்­றும் ஆனோல்ட் தெரி­வித்­த ­தா­வது:
வடக்­கில் உள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­களை தாவ­ர­வி­யல் பூங்­கா­வாக மாற்­ற­வேண்­டிய தேவை இல்லை. எதற்­காக நாம் அவற்­றைப் பூங்­கா­வாக மற்­ற­வேண்­டும்.
இலங்கை சட்ட ஏற்­பா­டு­க­ளின்­படி கல்­ல­றை­களை அமைப்­ப­தற்கு அனு­ம­தி­கள் இருக்­கின்­றன. எனவே நாம் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­களை பூங்­கா­வாக மாற்­று­வ­டி­வம் செய்­ய­வேண்­டிய தேவை எமக்கு இல்லை.
நாம் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­களை முன்­பி­ருந்­த­வாறே சீர­மைக்­க­மு­டி­யும். உரி­மைக்­கா­கப் போரா­டிய மாவீ­ரர்­க­ளுக்கு நாம் கொடுக்­க­வேண்­டிய மரி­யா­தை­களை கொடுக்­க­வேண்­டும் -என்­ற ­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here