முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கால­மானார்!

0
425

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று மாலை கால­மானார். அன்­னாரின் ஜனாஸா நல்­ல­டக்கம் இன்று லுஹர் தொழு­கையோடு (பிற்பகல் 12.30 மணி) தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நடை­பெ­ற­வுள்­ளது. சுக­யீனம் கார­ண­மாக கடந்த வாரம் முதல் கொழும்­பி­லுள்ள தனியார் மருத்­துவ மனையில் சிகிச்­சை­பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் சிகிச்சை பல­னின்றி நேற்று மாலை வேளையில் தனது 80 வயதில் கால­மானார்.
கொழும்பு மஹ­ர­க­மையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட அவர் மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி பெற்­றவர்.
1937 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் எட்டாம் திகதி பிறந்த அவர் கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியில் தனது கல்­வியைத் தொடர்ந்தார். அத்­துடன் மஹ­ர­கம கபூ­ரிய்யா அரபுக் கல்­லூ­ரி­யிலும் மார்க்கக் கல்வி பயின்­றுள்ளார். ஊட­க­வி­ய­லா­ள­ராக தனது தொழிலை ஆரம்­பித்த அவர் ஊட­கத்­து­றையில் பாரிய சேவை­யாற்­றி­யுள்ளார். மேலும் இவ­ருக்கு இரு ஆண் பிள்­ளை­களும் இரு பெண் பிள்­ள­களும் உள்­ளனர். தனது அர­சியல் வாழ்க்­கையை லங்கா சம­ச­மாஜக் கட்­சி­யூ­டாக ஆரம்­பித்த அவர் 1955 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­படத் தொடங்­கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here