வடமராட்சி பகுதியில் விசேட அதிரடிப்படை மீண்டும் களமிறக்கம்!

0
312

வடமராட்சிப் பகுதிக்கு மீண்டும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு சுற்று ரோந்து நடவடி க்கைகளும், வீதிச் சோதனைகளும் நடத்தப்பட்டுவருகின்றது.

கடந்த மாதம் 9ஆம் திகதி சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனம் மீது குடத்தனைப் பகுதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னா லையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்ற இளைஞர்பலியானார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன் முறைச் சம்பவங்களில் பருத்தித்துறைப் பொலி ஸாரின் ஜீப் வண்டி ஒன்றும் காவலரணும் தாக்கி சேதப்படுத்தி தீ வைக்கப்பட்டது.

அத்துடன் அதிரடிப்படையினரின் பவள் கவசவாகனம் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த மாதம் 21ஆம் திகதி வல்லிபுரம் மாவடிச் சந்தியில் வைத்து கடலோரக் காவல்பணியினை முடித்துவிட்டு முகாம் திரும்பிக் கொண்டிருந்த கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண் டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து மறுநாள் அப்பகுதிக்கு விரைந்த இலங்கை கடற்படைத்தளபதி தாக் குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்தினைப் பார் வையிட்டதுடன் இது சம்பந்தமாக பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பிலும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார்.

இதனைவிடவும் யாழ்ப்பாணத்தில் பொலி ஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இலக்கு வைக்கப்பட்ட சம்பவம் என்பவற்றை அடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்பின்படி விஷேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தி ற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவ் அணியினர் முதலாம் கட்டமாக இம் மாதம் 05, 06 மற்றும் 07ஆம் திகதிகளில் துன்னாலைப் பகுதிகளில் சுற்றி வளைப்பு களை மேற்கொண்டு வீடு வீடாக தேடுதல் கள் நடத்தப்பட்டது. விஷேட அதிரடிப்படையி னருடனுடன் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மூன்றுநாள் நடவடிக்கையினை முடித்துக் கொண்ட விஷேட அதிரடிப்படையினர் மீளப்பெறப்பட்டிருந்தனர்.

ஆனால் மீண்டும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விஷேட அதிரடிப்படை யினரின் பீல்பைக்குடன் துன்னாலைப் பகுதியினை அண்டிய பகுதிகளில் சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இச் சுற்று ரோந்து நடவடிக்கை நேற்றும் தொடர்ந்து இடம்பெற்றது. இவ் இரண்டு நாட்களிலும் விஷேட அதிரடிப்படையினரினால் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here