மன்னாரில் கடும் வரட்சி; பவுசர் மூலம் குடிநீர் வழங்கல்!

0
175

மன்னார் மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் வரட்­சியின் கார­ண­மாக மன்னார் மாவட்­டத்­தி­ன் நான்கு பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளி­லுள்ள மக்­க­ளுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை­யினால் பவுசர் மூலம் குடிநீர் வழங்­கப்­பட்டு வரு­வ­தாக மன்னார் மாவட்ட ஒருங் கி­ணைப்புக் கூட்­டத்­தின்­போது தெரி­விக்­கப்­பட்­டது. நடப்பு வரு­டத்தில் மன்னார்

மாவட்­டத்தில் நில­வி­வரும் வரட்­சியின் கார­ண­மாக சிறு­போகம் மற்றும் மேட்­டு­நிலப் பயிர்­செய்­கை­களை மன்னார் மாவட்ட விவ­சா­யிகள் கைவிட்­டுள்­ளனர். மேலும் இப்­ப­கு­தி­யி­லுள்ள பெரும்­பான்­மை­யான கிண­று­களும் நீர் வற்­றிய நிலையில் காணப்­ப­டு­கின்­றன

இந் நிலையில் கால்­ந­டை­க­ளுக்கும் குடிநீர் இன்றி பெரும் சிர­மத்தை எதிர் நோக்கி வரு­கின்­றன

அத்­துடன் நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள மக்­களும் தங்­களின் நாளாந்த தேவை­க­ளுக்­கான குடி­நீ­ருக்கு அவ­திப்­பட்டு வரு­வதைத் தொடர்ந்து பவுசர் மூலம் குடிநீர் வழங்­கப்­பட்டு வரு­கி­றது

நானாட்டான் பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள நரிக்­காடு, பரி­கா­ரி­கண்டல், பொன்­தீ­வு­கண்டல், உமக்­கிரி, வாழ்க்­கைப்­பெற்­றான்­கண்டல், இழ­கப்­பிட்டி, அச்­சங்­குளம் ஆகிய கிரா­மங்­க­ளுக்கும்

முசலி பிர­தேச செய­லகப் பிரிவில் அரிப்பு, பாழைக்­குழி, மறிச்­சிக்­கட்டி, கர­டிக்­குழி, வெள்­ளி­மைல, காயக்­குழி, முள்­ளிக்­குளம், கொக்­குப்­ப­டையான் ஆகிய கிரா­மங்­க­ளுக்கு கடந்த ஏப்­பிரல் மாதம் தொடக்கம் பவு­சர்கள் மூலம் குடிநீர் வழங்­கப்­பட்டு வரு­கி­றது

இவற்றில் நானாட்டான் பகு­திக்கு 60 குடும்­பங்­க­ளுக்கு இரண்டு நாளைக்கு ஒரு முறை 18 ஆயிரம் லீற்றர் நீர் வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கவும்

முசலி பிர­தேசப் பகு­திக்கு 1100 குடும்­பங்­க­ளுக்கு நாளாந்தம் 27 ஆயிரம் லீற்றர் குடிநீர் வழங்­கப்­பட்டு வரு­வ­தா­கவும்,  மடு பிர­தேச செய­லகப் பிரிவில் தம்­ப­னைக்­குளம், கட்­டை­ய­டம்பன், பூம­லர்ந்தான், தேக்கம், குஞ்சுக்குளம், பண்ணைவெட்டுவான் ஆகிய கிராமங்களுக்கு இரண்டு நாளைக்கு ஒருமுறை 18 ஆயிரம் லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here