ஏழை மக்களுக்கான உதவிகள் உன்னதமாக இருக்க வேண்டும்!

0
487

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்றான் பாரதி.
பாரதியின் இக்கவி வரிகள் வெறும் வார் த்தை வடிவங்கள் அன்று. அதற்குள் சமூக அக்கறை தெரிகிறது.
பசி என்ற பெரும் பிணி போக்க வேண்டும் என்ற மனிதம் பளிச்சிடுகிறது.

வயிற்றுப் பசி போக்குவதற்கு ஏதும் இல்லை என்ற நிலைமை மிகவும் கொடுமை யானது.
இந்த நிலைமை அன்றுதான் இருந்தது என்று யாரும் நினைத்து விடலாகாது. இன்றும் அந்தக் கொடுமை தொடர்கிறது.

ஏழை மக்கள் ஒரு நேர உணவுக்கும் ஏங் கும் பரிதாபம் சாதாரணமானதல்ல.
எனவே பசியாறுதல் என்ற விடயம் தொடர் பில் மத்திய, மாகாண அரசுகள் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும்.

உழைப்பாளிகள் இல்லாத, பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களை; அவர்களின் வாழ்வாதார நிலைகளை அறிந்து அதற்கேற்றால்போல் உதவித் திட்டங்கள் வகுக் கப்பட வேண்டும்.
இலங்கை போன்ற யுத்தம் நடந்து அழிவு கள் ஏற்படுத்தப்பட்ட மற்றும் இயற்கையின் சீற்றத்தால் அழிவுகளைச் சந்தித்த நாடுகளில் இந்த உதவித் திட்டங்கள் தாராளமாக இருக்க வேண்டும்.

எனினும் ஏழை மக்களின் சீவனோபாயம் அவர்களின் உணவுத் தேவை என்பவற்றுக் கான உதவித் தொகை, உதவித் திட்டங்களை தாங்க முடியாத சுமையாகவே ஆட்சியாளர் களும் அரச அதிகாரிகளும் கருதிக் கொள் கின்றனர்.

இதனால் ஏழைத் தாய்மார் அவர் தம் பிள்ளைகள் பட்டினியுடன் வாழும் துன்பம் தொடர்கிறது.
அண்மைக்காலமாக நாடுபூராகவும் வறு மைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டம் சமுர்த்தி உதவித் திட்டத்தை நிறுத்த வேண்டாம் என்பதற்கானது.
நாட்டில் இப்போது பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் நோக்கமும் தேவையும் வேறுபட்டது.

ஆனால் சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்த வேண்டாம் என்று ஏழை மக்கள் நடத்தும் போராட்டமானது அன்றாடச் சீவனோபாயத்து டன் தொடர்புபட்டது.
மூன்று நேர உணவு உண்பதற்கு யாருக்கு வசதி இல்லையோ அவர்களுக்கு உணவு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதென்பது அர சின் முதற்பணியாக இருக்க வேண்டும்.

இந்த அடிப்படை மனிதநேயத்தில் உலகின் பல நாடுகள் உத்தமமான நிலையில் உள்ளன.
ஆனால் இலங்கை போன்ற நாடுகள்தான் ஏழை மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தை – உதவு தொகையை நிறுத்துவதாக; குறைப்ப தாக அறிவிக்கின்றன. இது மிகவும் பாதக மான முடிவும் செயற்பாடுமாகும்.
எனவே வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் என்ற பாரதியின் உன்னத நினைப்பு யதார்த்த மாக்கப்பட வேண்டும்.
இதற்காக மத்திய, மாகாண அரசுகள் தீவிர மாகச் செயற்படுவது மிகமிக அவசியமான தாகும்.

(வலம்புரி)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here