யாழ்ப்பாணம் கொக்­குவில் பகு­தியில் பொலிஸார் மீது வாள்­ வெட்டு!

0
673

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்­பாக விசா­ரணை நடத்­து­வ­தற்கு சென்ற பொலிஸ் உத்­தி­யோ­ கத்­தர்கள் இருவர் மீது மோட்டார் சைக்­கிள்­களில் வந்த இனந்­தெ­ரி­யாத கும்­ப­லொன்று துரத்தி துரத்தி வாள்­வெட்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டுள்­ளது.

வாள்­வெட்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவரும் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இந்த சம்­ப­வ­மா­னது நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நண்­பகல் 12 மணி­ய­ளவில் கொக்­குவில் நந்­தாவில் அம்மன் கோவில் வீதியில் இடம்­பெற்­றுள்­ளது. கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தை சேர்ந்த பொலிஸ் காண்ஸ்­டபிள் சுரேன் மற்றும் பொலிஸ் காண்ஸ்­டபிள் ரட்­ணா­யக்க தம்­மிக்க ஆகிய இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுமே வாள்­வெட்டுத் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி காய­ம­டைந்­துள்­ளனர்.

நேற்று நண்­பகல் குறித்த இரண்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் இருந்து பொலிஸ் நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாடு தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்­காக கொக்­குவில் பகு­திக்கு மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்­ளனர். இதன்­போது கொக்­குவில் நந்­தாவில் பகு­தியில் உள்ள வெற்று பற்­றைக்­காட்டு பகு­தியில் சிலர் மது அருந்தி குழப்­பத்தில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அப் பகு­தியை சேர்ந்­த­வர்கள் கூறி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அப் பகு­திக்கு சென்ற இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் அங்கு சில இளை­ஞர்கள் மது அருந்­தி­கொண்­டி­ருப்­ப­தையும் அவர்­க­ளிடம் வாள் போன்ற ஆயு­தங்கள் இருப்­ப­த­னையும் அவ­தா­னித்­த­துடன் இரு­வரும் அங்­கி­ருந்து திரும்பி பொலிஸ் நிலையம் நோக்கி சென்­றுள்­ளார்கள்.

இச்­ச­ம­யத்­தி­லேயே குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களை மோட்டார் சைக்­கிளில் பின் தொடர்ந்து வந்த கும்­ப­லொன்று அவர்கள் மீது வாள்­வெட்டுத் தாக்­கு­தலை நடாத்­தி­யுள்­ளது.

மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் மூகங்­களை மூடிக் கொண்­டு­வந்த பத்­துக்கும் மேற்­பட்ட இனந்­தெ­ரி­யாத குழு­வொன்று இவர்­களை துரத்தி துரத்தி வாள்­வெட்டுத் தாக்­கு­தலை மேற்­கொண்­டு­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து படு­கா­ய­ம­டைந்த இரண்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்கள். இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரில் ஒரு­வ­ருக்கே கை, கால், துடை பகு­தி­களில் பல­மான காயம் ஏற்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து அப் பகு­தியில் பொலி­ஸாரும் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் வரு­விக்­கப்­பட்டு பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன் பொலிஸ் தட­ய­வியல் பிரிவு பொலி­ஸாரும் சம்­பவ இடத்­திற்கு சென்று விசா­ரணை நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர். குறிப்­பாக சம்­பவ இடத்­திற்கு சென்ற யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஸ்ரேனிஸ்லஸ் சம்­பவம் தொடர்­பான ஆரம்­ப­கட்ட விசா­ர­னை­களை மேற்­கொள்­வது தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யி­ருந்தார்.

இந்நிலையில் இவ் வாள்வெட்டு மற்றும் அதன் தொடர்ச்சியாக அப் பகுதியில் விஷேட அதிரடிப் படையினரும், ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் வருவிக்கப்பட்டிருந்தமையால் அப் பகுதியில் பதட்டமான ஒர் சூழல் நிலவியிருந்தது. இதேவேளை நேற்றுக் காலையும் அப் பகுதியூடாக சிலர் வாள்களுடன் நடமாடியிருந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here