வடமாகாண பிரேரணைக்கு புலம்பெயர் அமைப்புக்கள் ஆதரவு!

0
110

northern_provincial_councilவட மாகா­ண­ச­பையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­க்கு ஆத­ரவு தெரி­வித்­துள்ள புலம்­பெயர் அமைப்­புக்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் அலு­வ­ல­கத்தின் இலங்கை குறித்த விசா­ரணை அறிக்­கையை மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் வெளி­யி­ட­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

உலக தமிழ் ஒன்­றியம், பிரித்­தா­னிய தமிழர் பேரவை, இலங்கைத் தமிழ்ச் சங்கம் (அமெ­ரிக்கா), நியூ­சி­லாந்து தமிழ் சமூகம் உள்­ளிட்ட பல்­வேறு புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­க்கள் இந்த கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளன.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யாளர் சயிட் அல் ஹுசே­னுக்கு கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­யுள்ள இந்த அமைப்­புக்கள் இந்த விவ­கா­ரத்தில் சர்­வ­தேச வழி­காட்­டலில் அமைந்த விசா­ரணை அவ­சியம் என்­ப­த­னையும் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

இலங்­கையில் தமி­ழர்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­ட­தாக வட மாகா­ண­ச­பையில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த நிலை­யி­லேயே இந்த பிரே­ர­ணைக்கு தமிழ் புலம்­பெயர் அமைப்­புக்கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­துடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யா­ள­ருக்கு கடி­தத்­தையும் அனுப்­பி­யுள்­ளன.

இதே­வேளை இந்த விவகாரம் தொடர்பில் புலம் பெயர் அமைப்­புக்கள் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

2009 ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரிய மனிதப் படு­கொ­லைகள் ஓர்சாதா­ரண விட­ய­மாகக் கரு­தப்­ப­டக்­கூ­டாது. இலங்­கையில் தமிழ் சமூகம் தொடர்ச்­சி­யாக ஒடுக்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

உள்­நாட்டு ரீதி­யான விசா­ரணைப் பொறி­மு­றைமை குறித்து காலத்­திற்குக் காலம் வாக்­கு­று­திகள் அளிக்­கப்­பட்ட போதிலும் அவற்றில் எவ்­வித முன்­னேற்­றமும் கிடை­யாது .

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யினால் நடத்­தப்­பட்டு வரும் விசா­ர­ணைகள் உரிய நேரத்தில் உரிய முறையில் அறி­விக்­கப்­பட வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மா­னது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன சில விட­யங்­களை அவ­ச­ர­மாக செய்­துள்ளார். அவர் யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் பதில் பாது­காப்பு அமைச்­ச­ராகச் செயற்­பட்­டுள்ளார். அதே­நேரம் யுத்த கால­த்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் குறித்து உள்­ளக விசா­ரணை நடத்­தப்­­படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் மங்கள சமரவீரவும் அறிக்கையை தாமதப்படுத்து மாறும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஐ.நா.விசாரணை அறிக்கை தாமதமானால் அது பாரிய கேள்விக் குறியாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here