இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கையினை யார் தடுத்தாலும் உடனடியாக சமர்ப்பிக்க வலியுறுத்தி எதிர்வரும் 24ம் திகதி மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ. இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்இ யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாபெரும் பேரணியின் போதுஇ இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்க வலியுறுத்திஇ ஜநா மனித உரிமை பேரவைக்கு மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளும்இ புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தினாலும்இ ஜ.நா சபையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகளை அறிக்கையிட்டு தீர்ப்பு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தது. இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினைக் கூறி பலர் இந்த விசாரணை அறிக்கையினை தாமதிக்க முயற்சிக்கின்றார்கள்.
இந்த விசாரணை அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு தாமதிக்கப்படுமாயின்இ அது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும் என்பதன் அடிப்படையில்இ இந்த நீதி கிடைக்காமல் போய் விடும். எனவே அதற்கு இடம்கொடுக்காமல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில்இ இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்ட பேரணி ஒன்றையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.