அகதிகளுடன் வந்த படகில் கைதான 37 இலங்கையரை நடுக்கடலில் வைத்து கடற்படையிடம் ஒப்படைத்த ஆஸி.அரசு

0
271

அவுஸ்திரேலியா நோக்கி 37 shipஒன்றை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் ஒப்புக்கொண்டுள்ளார். நடுக்கடலில் வைத்து அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கொகோஸ் தீவுக்கு அருகே கடந்த 15ஆம் திகதி அவுஸ்திரேலிய எல்லைக்காவல் படையினரால் மறிக்கப்பட்ட படகில் வந்த 38 பேரில் ஒருவர் மட்டும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

ஏனைய 37 இலங்கையர்களும் கடந்த புதன்கிழமை மாலை காலிக்கு கிழக்கு தென்கிழக்கேயுள்ள நடுக்கடலில் வைத்து அவுஸ்திரேலிய எல்லைக்காவல்படை அதிகாரிகளால் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். படகில் வந்த அனைவரும் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் கடலில் வைத்து  சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் விசாரணை  செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் அகதி அந்தஸ்து தொடர்பான நடைமுறைகளுக்கு ஏற்றவரென பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இவர் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையின்படி பபுவா நியூகினியா அல்லது நௌரு தடுப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற போது இந்தோனேஷியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலியக் கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்ட 37 இலங்கையர்கள் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 1ஆம் திகதி 37 இலங்கை அகதிகளுடன் சென்ற படகு ஒன்று இந்தோனேஷியாவுக்கு அருகே அவுஸ்ரேலிய கடலோரக் காவல்படையால் தடுக்கப்பட்டது. மிகவும் இரகசியமான முறையில் தடுத்து வைத்திருந்த இந்தப் படகை அவுஸ்திரேலியக் கடலோரக் காவல்படை, இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது. இலங்கை கடற்படையினர் இவர்களை நேற்று முன்தினம் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் 13 சிங்களவர்களும் 23 தமிழர்களும் ஒரு பறங்கியரும் அடங்குவர். ஒன்பது மாதம் தொடக்கம் 10 வயதுக்கு இடைப்பட்ட ஆறு சிறுவர்களும் இதில் அடங்கியுள்ளனர். இந்தப் படகில் பிடிபட்ட தமிழர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here