பிரான்சில் தமிழியல் பட்டப்படிப்பில் மேலும் ஒரு மாணவி சாதனை!

0
9600
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (B.A)பட்டப்படிப்பிற்காக 20.05.2017 அன்று நடைபெற்ற நுழைவுத்தேர்வில்  செல்வி சஜீர்த்தனா நேசராசா என்ற மாணவி சாதனை படைத்துள்ளார்.

குறிப்பிட்ட இணையவழித் தேர்வில் 100 மதிப்பெண்களைப் பெற்றே இவர் சாதனை படைத்துள்ளார். செல்வி சஜீர்த்தனா நேசராசா வன்னி பெருநிலப்பரப்பைப் பூர்வீகமாகக் கொண்டு போர்ச் சூழல் காரணமாக புலம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்படும் குறித்த பட்டப்படிப்பில் , பிரான்சில் பிறந்து தமிழ்ச் சோலைப் பள்ளிகளில்  வளர்தமிழ் 12 வரை  நிறைவுசெய்த மாணவர்கள் கல்வி கற்றுவருவது பெருமைக்குரியதாகக் கருதப்படும் சூழ்நிலையில் குறித்த மாணவி இச்சாதனையைப் படைத்துள்ளமை மேலும் பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.
பிரான்சு தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழத்துடன் சேர்ந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள்  சாதனை படைத்துவருகின்றனர்.
2016 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி. பரமேஸ்வரன் சுசானி ,எழுத்துப் பகுதி மற்றும் இணைய வழி வினாக்கள் என இரண்டு பகுதிக்கும் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதேவேளை 2015 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி தட்சாயணி தங்கத்துரை இணைய வழித் தேர்வில் 100 புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு கடந்த நான்கு வருடங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து இரண்டு தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here