ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் தமிழினப் படுகொலை 8ம் ஆண்டு நினைவு!

0
395

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் _8ம் ஆண்டு நினைவு 18.05.2017 வியாழக்கிழமை  ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் காலை 9.00 மணி தொடக்கம் 17.00 வரை நடைபெற்றது.

இந் நிகழ்வில் 100க் கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.

பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.

சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப் பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி, நீதியைப் பெற்றுத் தரவும், அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக்கோரியும் உள்ளடங்கிய மகஜர் ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் பொதுச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.

இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்  பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் முழக்கத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here