இனப்­ப­டு­கொ­லையை நினை­வு­கூ­ரும் நாளில் கேளிக்கை நிகழ்­வு நடத்­த­வேண்­டாம்!

0
308

முள்­ளி­வாய்க்­கால் இனப்­ப­டு­கொ­லையை நினை­வு­கூ­ரும் நாளில் கேளிக்கை நிகழ்­வு­ களை நடத் ­திப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் மனங்­களை நோக­டிக்­க­வேண்­டாம் என முல்­லைத்­தீவு மாவட்டச் சிவில் அமைப் புக்­கள் கூட்­டா­கக் கோரிக்கை விடுத்­துள்ளன.
முல்­லைத்­தீவு மாவட்ட சிவில் அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் நேற்று முன் தினம் பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் முல்­லைத்­தீவு கள்­ளப்­பாடு பொது­நோக்கு மண்­ட­பத்­தில் கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்­தி­னர். இதன் பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சிவில் அமைப்­பு­கள் மேற்­கண்­ட­வாறு கோரி­யுள்­ளன.அவை மேலும் தெரி­வித்­த­தா­வது,
முள்­ளி­வாய்க்­கால் இனப்­ப­டு­கொ­லையை நினை­வு­கூ­ரும் மே மாதம் 18 திக­தியோ அல்­லது அதன் பெய­ரிலோ எந்­த­வி­த­மான களி­யாட்ட நிகழ்­வு­க­ளை­யும் நடத்­த­வேண்­டாம். எமது இனம் அழிக் ­கப்­பட்ட அன்­றைய நாளை நாம் கொண்­டாட்­ட­மா­கக் கரு­தி­விட முடி­யாது. உணர்­வு­பூர்­வ­மாக எமது உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செய்து பூசிக்­கும் நன்­நா­ளில் எமக்கு நடந்த வன்­கொ­டு­மையை மறந்து கேளிக்கை நிகழ்­வு­க­ளில் எம்மை ஈடு­ப­டுத்­திக் கொள்­வது எம் இனத்­துக்­குச் செய்­யும் துரோ­க­மா­கவே கரு­தப்­ப­டும்.
காணா­மற்­போ­ன­வர்­க­ளுக்­குப் பதில் கிடைக்­க­வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும், பொது­மக்­க­ளின் காணி­யில் இருந்து இரா­ணு­வம் வெளி­யே­ற­வேண்­டும் என­வும் பல போராட்­டங்­கள் முனெடுக் கப்­ப­டு­வ­ரும் இந்­தக் கால­கட்­டத்­தில் முள்­ளி­வாக்­கால் இனப்­ப­டு­கொ­லையை அடி­யொற்­றிக் கேளிக்­கை­யில் யாரும் ஈடு­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­து-­என்று கூறின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here