கிளிநொச்சியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
409
உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் (வயது 34) என்ற குடும் பஸ்தரே  இதில் உயிரிழந்தவராவார்.
கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது, குடும்பப் பிணக்கினால் பிரஸ்தாப குடும்பஸ்தர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here