போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டும்.

0
149

போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டும். பன்­னாட் ­டுச் சமூ­கத்­துக்கு நீதி வழங்­கு­வ­தாக இலங்கை வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. காலத்­தைக் கடத்­தா­மல் தீர்வு வழங்க சிறீலங்கா அரசு முன்­வ­ர­வேண்­டும். இவ்­வாறு பன்­னாட்டு மன்­னிப்­புச் சபைபொதுச் செய­லர் சயில் செட்டி மன் ­னா­ரில் வைத்­துத் தெரி­வித்­தார்.
நில­வி­டு­விப்­புக்­கா­கப் போரா­டும் முள்­ளிக்­கு­ளம் மக்­க­ளை­யும், மறிச்­சுக்­கட் ­டிப் பிர­தேச மக்க ளையும் மன்­னிப்­புச் சபை­யின் பொதுச் செய­லர் தலை­மை ­யி­லான குழு­வி­னர் நேரில் சென்று சந் ­தித்­த­னர். போராட்­டத்­தில் ஈடு­பட் டுள்ள மக்­கள் தமது பிரச்­சி­னை­களை எடுத்­துக் கூறி­னர். அருட் ­தந்­தை­யர்­கள், தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்­பின் பிர­தி­நி­தி­க­ளை­யும் சந்­தித்­த­னர்.
இதன் பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துத் தெரி­வித்த சயில் செட்டி, இரா­ணுவ முகா­முக்கு முன் னால் காணி மீட்­புக்கு மக்­கள் முற்­று­கைப் போராட்­டம் நடத்­து­வ­தாக அறிந்து இங்கு வந்­தி­ருக்­கி ­றோம். நேர­டி­யாக நில­மை­களை ஆராய்ந்துள்­ளோம். இன்­றைய சூழ்­நி­லை­யில் இலங்கை என்று சொன்­னால் உலக நாடுகளுக்­குத் தெரிந்­துள்­ளது.
2009 ஆம் ஆண்டு உள்­நாட்­டுப் போர் முடி­வ­டைந்து கிட்­டத்­தட்ட 10 வரு­டங் ­கள் நெருங்கும் நிலை­யி­லும் மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. மீள்­கு­டி­யேற்­றம் உட்ப­டக் காணி தொடர்­பான பிரச்­சி­னை­கள் அர­சால் தீர்க் ­கப்­ப­ட­வில்லை.போரி­னால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்­டும். அதை வலி­யு­றுத்­தவே நாங்­கள் இங்கு வந்­தி­ருக்­கி­றோம். பன் னாட்­டுச் சமூ­கத்­தி­டம் சிறீலங்கா வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ள நிலை­யில் மக்­க ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டும்.
சிறீலங்கா அரசு காலம் தாழ்த்­தக் கூடாது. புதிய அரசு பத­வி­யேற்று இரண்டு வருட காலம் முடிந் ­து­விட்­டது. அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். நாங் ­கள் இது தொடர்­பில் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சிறீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்பட தலை­வர்­களை நாங்­கள் சந் ­திக்­க­வுள்­ளோம். பாதிக்­கப்­பட்ட மக்­கள் தொடர்­பா­க­வும் அவர்­க­ளின் நீதிக் ­கா­க­வும் அர­சி­டம் வலி­யு­றுத்­து­வோம் என்­றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here