பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவது ஏற்புடையதல்ல என்று வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே வடமாகாண முதலமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 34ஆவது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில், பொறுப்பு கூறலுக்கு இலங்கை இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது. எனினும், கால அவகாசம் வழங்குவது பிழையான ஒன்றாகும்.
நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசு இது வரையில் என்ன செய்திருக்கின்றது என்பதை ஐ.நா. சபை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
யுத்த காலத்திலும், அதற்கு பிற்பட்ட காலங்களிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்ம், தீர்வுத் திட்டங்கள் எதனையும் அரசு வழங்கவில்லை.
இந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக கால அவகாசம் கோரியுள்ளமை ஏற்புடையதல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.