முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் நகுலேஸ்வரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7பேரில் நால்வர் விடுதலை செயுமாறும் கிராம அலுவலகர் உட்பட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படியும் மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் வெள்ளாங்குளத்தை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) கடந்த 12.11.2014 இரவு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவேளை இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவகர் உட்பட 7பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பயங்கர வாதகுற்றத் தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.
குறித்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது எழு சந்தேக நபர்களில் நான்கு பேர் நிரபராதிகள் என விசாரணையில் தெரியவந்ததையடுத்தே மேற்குறித்த உத்தரவினை நீதிபதி விடுத்திருந்தார்.