தமிழர் தாயகம் இணைப்பு கைவிரித்தது இந்தியா

0
711

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு  சிறீலங்காக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நேற்றுக்காலை பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இந்தப் பேச்சுக்களில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாக்குறுதியை, 1987ஆம் ஆண்டு இந்தியா வழங்கியது என்றும், அதனை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்ற வாக்குறுதியையும் இந்தியா கொடுத்தது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட போது இந்தியா அதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் இந்தியா தெளிவான அக்கறை இழந்து விட்டது என்று அவர் கூறியிருந்தார்.
அதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், “1987ஆம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது மாறி விட்டது, கொழும்பில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது பல்வேறு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனினும், ஏனைய எல்லா விவகாரங்கள் குறித்து பேசும் போதும், வடக்கு, கிழக்கு இணைப்பை பணயம் வைக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டது ஏமாற்றுவதாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here