ஐரோப்பிய . ஒன்றிய வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

0
155

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளி நொச்சியில் ​நேற்று இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக கிளிநொச்சியில் பிரிவில் மருதநகர் கிராமத்தில் இரண்டு வீட்டுத்திட்ட பயனாளிகளின் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் 860 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வீட்டுத்திட்டத்தி ற்கு ஆறு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா நிதி வழங்குவதோடு, வாழ்வாதாரத்திற்கும் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.
வீட்டுத்திட்டத்தை ஹாபிடாட் பேரர் ஹியுமானிட்டி நிறுவனமும், பயனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை வேள்ட் விசன் நிறுவன மும் முன்னெடுக்கவுள்ளன.
இங்கு கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு, ஐரோப்பிய ஒன்றியம் 2005 முதல் இலங்கையில் பணியாற்றி வருகிறது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 2455 வீடுகளை அமைப்பதற்கு உதவியுள்ளோம், இத்திட்டத்தின் கீழ் தனியாக வீடுகளை மாத்திரமன்றி மீள்குடியேறியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் உதவிகளை வழங்கி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here