வட-கிழக்கு இணைந்த சமஷ்டி அரசியல் தீர்வே வேண்டும் திருமலையில் போராட்டம்!

0
166
வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோண மலையில் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, இது தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைப்பதற்கான மனு ஒன்று திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேலிடம் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கையளித்துள்ளனர்.
நாட்டின் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சர்ச்சைகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே, புதிதாக உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டம் திருமலை  உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள சட்ட உதவி மையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது  வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம், கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், நடந்தேறிய சித்திரவதை மற்றும் படுகொலைகளை விசாரிப்பதற்கு விசேட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களால் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், இந்தக் கோரிக்கைகள் தொடர்பான மனுவை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைப்பதற்காக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவேலிடம் இந்த போராட்ட த்தில் பங்கேற்றவர்கள் கையளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here