
2005 டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் பரராஜசிங்கம் சுடப்பட்டார்.
இவருடைய 11 வது ஆண்டு நினைவு தினம் இன்று த.தே.ம.மு அலுவலகத்தில் அதன் தலை வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஐசிங்கதின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் கட்சி பிரமுகர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்