கடும் மழையால் வெள்ளக்காடாக மாறிவரும் யாழ் நகரம்!

0
528
தற்போது  தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் யாழ் நகரம் வெள்ளக்காடாக மாறிவரு கின்றது.  யாழ்ப்பாணம் பஸ் நிலை யத்திற்கு அருகிலுள்ள நடைபாதை கடைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கடைகளிற்குள் வெள்ளம் புகுந்தமையால் வியாபாரம் தடைப்பட்டதுடன் குறித்த பகுதியில் போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால் குப்பைகள் தேங்கிய நிலையில் அடைக்கப்பட்டு காணப்படு வதால் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் பாரிய இடர்பாடுகளை எதிர் நோக்கியுள்ளனர்.
குறித்த பாதிப்புக்கள் குறித்து  மாநகர ஆணையாளரிற்கு அறிவித்த போதிலும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்பட ல்லை . கடந்த வாரம் யாழ் மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளிகள் 9 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தத்தால் குப்பைகள் தேங்கியதாகவும் , வேலை நிறுத்தம் முடிவுற்ற நிலையிலும் குப்பைகள் அகற்றப்படாமையே இதற்கு காரணம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர் .
இதேவேளை பெய்து வரும் கன மழையால் யாழ்.நகரை அண்டிய வசந்தபுரம், நித்தியவெளி, சூரியவெளி மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
மழை வெள்ளம் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
1479798907_unnamed%202 1479798921_unnamed%203 1479798939_unnamed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here