

கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் ட்ரம்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ட்ரம்ப்பின் இஸ்லாமியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த அகதிகள் மீதான கருத்தே அவருக்கு எதிரான போராட்டங்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.மேலும் பல்வேறுt பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரை, பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்தவரை அதிபராக ஏற்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரவித்தனர்.பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினர் விரட்டினர்.பதவியேற்பதற்குள்ளேயே ட்ரம்ப்க்கு எதிராக வெடித்துள்ள போராட்டம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.