மாவீரர்களின் கனவுகளை உலகெல்லாம் உள்ள தமிழர்கள் உறுதி எடுக்கும் நாள்!

0
597
tcc logo copy                           தேசிய மாவீரர் நாள் கார்த்திகை 27 – 2016
                                                                                                                05.11.2016
அன்பான பிரான்சு வாழ் தமிழ் உறவுகளே! வணக்கம்
‘இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”
– தமிழீழத் தேசியத் தலைவர் –
எமது மாவீரர்களுக்கு சுடரேற்றி, மலர்தூவி மதிப்பளித்து எழுச்சிகொள்ளும் நாள் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை 27. வழமைபோல் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய மாவீரர் நாள் அண்மித்து வருகிறது. அதனை ஏற்று அதற்கான சகல முன்னாயத்தப் பணிகள் அனைத்தும் தமிழர் வாழும் நாடுகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரான்சு வாழ் ஈழத்தமிழர்களும் தம்மைத் தயார்படுத்தித் தமது பணிகளைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சுடன் இணைந்து வழங்கி வருகிறார்கள்.
இதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லாத வகையில் முன்னின்று உழைத்தும் வருகிறார்கள். இது தாயக தேசப் பணி . இன்று எம்முன் அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் கனவுகளை அவர்களது நாளில் உலகெல்லாம் உள்ள தமிழர்கள் உறுதி எடுக்கும் நாள்.
ஆம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு இன்றுவரை இந்நாளை மிகவும் உறுதியாகவும் நல்லிணக்கத்துடனும் சிறப்பாக எழுச்சியுடன் உரியமுறையில் மக்களின் முழுமையான பங்களிப்பு, ஒத்துழைப்புடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உபகட்டமைப்புகளும் நடாத்தி வந்தமையும் நடாத்தி வருகின்றமையும் யாவரும் அறிந்த விடயம் ஆகும். 2009 ஆம் ஆண்டின்பின் ஏற்பட்ட தெளிவின்மை, புரிந்துணர்வின்மை காரணமாக மாவீரர்நாள் இன்னொரு பிரிவாக நடாத்தப்பட்டது. இது முறையற்ற செயல் என்பதைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட தேசிய மாவீரர் நாளிற்கு பலம்சேர்த்ததினூடாக மக்களாகிய நீங்கள் நிருபித்தீர்கள்.
அதன் பின்விளைவாக மாவீரர்நாள் தமிழர் ஒருங்கிணைப்பின் கீழ் ஒன்றாகவும், ஒரு மாவீரர் நாளாகவும் 2013, 2014, 2015 சிறப்பாக நடைபெற்றது.
இம்முறை 2016 கார்த்திகை 27 தேசிய மாவீரர்நாள் பொருந்தாத, ஏற்கமுடியாத முரணான கருத்துகளை மக்களிடையே பரப்பி எமது மக்களை குழப்பத்திற்கு இட்டுச்செல்ல இன்னொரு பிரிவாக மாவீரர் நாள் நடாத்தத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இன்றையகாலச் சூழ்நிலையில் தாயகத்தின் நிலை, ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடைகளை நீக்க முடிவு எடுக்கின்றவேளை, எமக்கான நீதி கிடைக்கின்ற நேரம் குழப்பங்களை ஏற்படுத்த உள்ளவர்கள், யாருடைய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றார்கள் என்பதை இனம் கண்டு மக்களே விழிப்பாக இருங்கள்.
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர்நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து விடுதலையை வென்றெடுக்க ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்குமாறு உரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.
                                         தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
   பிரான்சு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
maveerar-2016-arikai-copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here