நாரஹேன்பிட்டியில் கைப்பற்றப்பட்ட விமானம் குறித்து விசேட வாக்குமூலம் பதிவு: களஞ்சியசாலைக்கும் சீல்!

0
135

plaightநார­ஹேன்­பிட்டி பொரு­ளா­தார மத்­திய நிலைய களஞ்­சி­ய­ச­ாலையில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சிறிய ரக விமா­னத்தை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் மக­னான யோசித்த ராஜ­ப­க் ஷ­வுக்கு பரி­சாக தான் வழங்­கி­ய­தாக பிர­பல திரைப்­பட இயக்குனர் சந்­திரன் ரத்னம் வாக்கு மூலம் அளித்­துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜன­வரி மாத­ம ளவில் தான் அதனை அவ­ருக்கு வழங்­கி­ய­தா­கவும் அதன் பின்னர் அந்த விமானம் தொடர்பில் தனக்கு எவ்­வித தகவல்­களும் தெரி­யாது எனவும் நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ருக்கு அவர் வழங்­கி­யுள்ள வாக்குமூலத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

எனினும் திரைப்­பட இயக்குனர் வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்தை பொலிஸார் தொடர்ந்தும் ஆராய்ந்து வரு­வ­தா­கவும் இது தொடர்­பி­லான விரி­வான விசா­ர­ணை­யொன்றை நடத்தும் பொறுப்பு கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழான விசேட குழு­வொன்­றிடம் ஒப்­ப­டைக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

குறித்த விமானம் எப்­படி அந்த இடத்­துக்கு வந்­தது? அந்த விமா­னத்­துக்கு சிவில் விமான சேவைகள் அதி­கா­ரியின் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ளதா? விமா­னத்தின் சொந்தக் காரர் யார்? நேற்று முன்தினம் மாலை நால்வர் வந்து வேன் ஒன்றில் அதனை எடுத்துச் செல்ல முற்­பட்­டனர், ஏதேனும் செயற்­பா­டு­க­ளுக்கு அந்த விமானம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதா? என்­பது குறித்து இந்த விசா­ர­ணை­களின் போது கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் கீழ் இடம்­பெறும் இந்த விசா­ர­ணை­க­ளுக்கு உதவும் வித­மாக விமானம் மீட்­கப்­பட்ட இட­மான நார­ஹேன்­பிட்டி பொரு­ளா­தார மத்­திய நிலைய களஞ்­சி­ய­சா­லைக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் விமா­னமும் அங்­கேயே வைக்­கப்பட்டு விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் அஜித் ரோஹண மேலும் குறிப்­பிட்டார்.

நேற்று முன்தினம் மாலை 6.15 மணி­ய­ளவில் குறித்த களஞ்­சி­ய­சா­லைக்கு இரத்­ம­லா­னையை சேர்ந்த ஏசியன் எயார் சென்டர் என்ற தனியார் விமான ஓட்­டுநர் பயிற்சி நிலையம் ஒன்றை சேர்ந்த நால்வர் நார­ஹேன்­பிட்­டி­யி­லி­ருந்து குறித்த விமா­னத்தை கொண்டு செல்ல முனைந்­துள்­ளனர். இந்த விமான ஓட்­டுநர் பயிற்சி நிலை­ய­மா­னது திரைப்­பட இயக்குனர் சந்­திரன் ரத்­னத்­துக்கு சொந்­த­மா­ன­தாகும்.

எனினும் விமானம் ஒன்­றினை சிலர் கடத்த முயற்­சிப்­ப­தாக 119 தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஒருவர் நார­ஹேன்­பிட்டி பொரு­ளா­தார மையத்­தி­லி­ருந்து விமானம் ஒன்றை இரத்­ம­லானை பகு­தியை சேர்ந்த நிறு­வனம் ஒன்­றுக்கு சிலர் எடுத்துச் செல்ல முற்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளார். இதனை அடுத்து அந்த தக­வ­லா­னது நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. அதனை தொடர்ந்து குறித்த இடத்­துக்கு சென்ற நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான பொலிஸ் குழு அந்த விமா­னத்தை மீட்­டுள்­ளது.

பொலிஸார் அங்கு செல்லும் போது அந்த விமா­னத்தின் சிற­கு­களை சிலர் கழற்­றிக்­கொண்­டி­ருந்­துள்­ளனர். இதன் போதே பொலிஸார் அதனை கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இத­னி­டையே குறித்த சிறிய ரக விமா­ன­மா­னது இருவர் பய­ணிக்கக் கூடி­ய­தாகும்.

இந் நிலை­யி­லேயே விமா­னத்தை எடுத்துச் செல்ல வந்த நிறுவ­னத்தின் உரி­மை­யா­ள­ரான சந்­திரன் ரத்­னத்­திடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்­துள்­ளனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் மாலை குறித்த விமா­னத்தை பாகங்­க­ளாக பிரிக்க உத­வு­மாறு தம்­மிடம் நபர் ஒருவர் கேட்­ட­தற்­கி­ணங்­கவே அங்கு தமது ஊழி­யர்கள் நால்­வரை அனுப்­பி­ய­தாக குறிப்­பிடும்

திரைப்­பட இயக்குனர், வேறு நோக்­கங்கள் இல்லை என குறிப்­பிட்­டுள்ளார்.இத­னி­டையே இந்த விமா­ன­மா­னது உள் நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் அதனை பேராசிரியர் ரே விஜேவர்த்தன தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அனைத்து தகவல்களினதும் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னர் விசாரணை நிறைவடையும் போது உண்மையான தகவல்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here