பளையில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேர் பலி!

0
367

11679யாழ்ப்பாணம்-கிளிநொச்சி பளைப்பகுதியில் தனியார் பேருந்து மற்றும் ஹயஸ் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த 3 பேர் உட்பட ஐவர் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பளை தர்மங்கேணி  278  மைல் கல்லுக்கும் 279 ஆவது மைல்  கல்லுக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இக் கோரவிபத்து  இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச்சம்பவத்தில் கொழும்பிலுள்ள உறவினரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டு விட்டு ஹயஸ் வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி வடக்கை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்களான தந்தை, தாய், மகன் உட்பட 4 பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறிப் பலியாகியதுடன் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை புலோலி வடக்கிலுள்ள  ஒரே குடும்பத்தை சேர்ந்த வர்களான  வேலுப்பிள்ளை பசுபதி (வயது-89) பசுபதி, வள்ளிப்பிள்ளை (வயது-75), ஹயஸ் வாகன சாரதியான பசுபதி நந்தமூர்த்தி (வயது-43) ஆகியோரும், அவர்களின் உறவினரான கணேசமூர்த்தி பொன்னம்மா (வயது-70), தர்மலிங்கம் சாந்தா தேவி (வயது-72) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஆனந்தராஜா, பச்சிலைப்பள்ளி பளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சிவரூபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் வருகைதந்து விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டிருந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட் டுள்ளதுடன் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேரும் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஹயஸ் வானில் பயணித்த வடமராட்சிப் பகுதியை சேர்ந்த கந்தசாமி ஈசன் (வயது-45), செல்வராசா பிறேம்லால் (வயது-26), சூரியகுமார் குலசாந்தன் (வயது-32), சாரதியின் மனைவியான நந்தமூர்த்தி சுதாயினி (வயது- 42) ஆகிய  4 பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத் தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேற்படி விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் சாரதி பளைப்பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் விபத்துக்குள்ளான வாகனங்கள் இரண்டும் பளைப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here